search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோயம்பேட்டில் தண்ணீர் லாரி மீது வேன் மோதல்- டிரைவர் பலி மெட்ரோ ரெயில் தொழிலாளர்கள் 2 பேர் படுகாயம்
    X

    கோயம்பேட்டில் தண்ணீர் லாரி மீது வேன் மோதல்- டிரைவர் பலி மெட்ரோ ரெயில் தொழிலாளர்கள் 2 பேர் படுகாயம்

    • போலீசார் விரைந்து வந்து மெய்யிரையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • பழுதடைந்த தண்ணீர் லாரி எந்தவொரு சமிக்கை விளக்குகளும் எரியவிடாமல் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்ததாக தெரிகிறது.

    போரூர்:

    சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் மெய்யிரை (வயது39). டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நள்ளிரவு 1மணி அளவில் வேனில் மெட்ரோ ரெயில் ஒப்பந்த தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு அண்ணா நகர் நோக்கி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    ரோகிணி தியேட்டர் மேம்பாலம் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அங்கு பழுதாகி நின்று கொண்டு இருந்த தண்ணீர் லாரி மீது வேகமாக மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த டிரைவர் மெய்யிரை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். வேனில் இருந்த மெட்ரோ ரெயில் ஊழியர்களான பாலசந்திரன், ரமணா இருவரும் லேசான காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து மெய்யிரையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பழுதடைந்த தண்ணீர் லாரி எந்தவொரு சமிக்கை விளக்குகளும் எரியவிடாமல் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×