search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவில் திருவிழாவில் காதல் கலப்பு திருமணம் செய்த தம்பதியினர் பங்கேற்க எதிர்ப்பு- கிராம மக்கள் தற்கொலை முயற்சி
    X

    தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் நேரில் சந்தித்து அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    கோவில் திருவிழாவில் காதல் கலப்பு திருமணம் செய்த தம்பதியினர் பங்கேற்க எதிர்ப்பு- கிராம மக்கள் தற்கொலை முயற்சி

    • பெண்கள் அதிக அளவில் தொடர்ந்து கும்பாபிஷேக நிகழ்வுகளுக்கான வேலைகளை செய்து வந்தனர்.
    • பூச்சி மருந்து குடித்த 6 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே வேப்பமரத்தூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2013-ம் ஆண்டு நடத்த முற்பட்டபோது அதே பகுதியைச் சேர்ந்த கலப்பு திருமணம் தம்பதியினரை கலந்து கொள்ளக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் அந்த தம்பதியினர், தங்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர். காதல் கலப்பு திருமணம் செய்ததால் தான் இவ்வாறு செய்கின்றனர் என்று கிராமத்தை சேர்ந்த 22 பேர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

    வழக்கு நீதிமன்றத்தில் 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் நீதிமன்றத்தில் கிராம மக்கள் நாங்கள் கோவிலுக்கு வரும் யாரையும் தடுக்கவில்லை.

    மேலும் இது அனைவருக்குமான கோவில் தனிப்பட்ட நபர் அவருடைய சொந்த வெறுப்புகளின் காரணமாக தவறான வழக்கு தொடுத்துள்ளார் என கிராம மக்கள் கொடுத்த விளக்கத்தின் அடிப்படையில் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த தடை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது.

    அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி கோவில் இந்த வருடம் கும்பாபிஷேகம் நடத்துவது என முடிவெடுத்துள்ளனர். இதற்காக அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அதிக அளவில் தொடர்ந்து கும்பாபிஷேக நிகழ்வுகளுக்கான வேலைகளை செய்து வந்தனர்.

    இந்நிலையில் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கலப்பு திருமணம் செய்த தம்பதியினரிடம் வரி வாங்கவில்லை என்றும், தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டதாக பொம்மிடி போலீஸ் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார்.

    இதுகுறித்து பொம்மிடி போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்க முடியாது விழா ஏற்பாடுகளை நிறுத்தி வையுங்கள் என்று கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்ற மகிழ்ச்சியில் பணிகளில் ஈடுபட்டு வந்த பெண்கள் கலப்பு திருமணம் செய்தவர்களால் கோவில் கும்பாபிஷேகம் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டதை தாங்க முடியாமல் மனம் உடைந்து கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து நேற்று இரவு ஊர் நடுவில் பாயாசத்தை காய்ச்சினர்.

    பின்னர் அவர்கள் அதில் செடிக்கு அடிக்கும் பூச்சி மருந்தை கலந்து கிராம மக்களில் 6 பேர் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். உடனே போலீசார் தடுக்க முயன்றனர்.

    அதற்குள் அந்த பாயசாத்தை வேப்பமரத்தூரைச் சேர்ந்த ராமு (வயது35), கவிதா (35), அமுதா (35), அலமேலு, விஜயா, தேன்மொழி ஆகிய 6 பேர் குடித்துள்ளனர்.

    இதனால் பதறிப்போன போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் பூச்சி மருந்து குடித்த 6 பேரையும் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பொம்மிடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 பேரையும் பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி மற்றும் தருமபுரி தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆகியோர் நேரில் சந்தித்து அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    இச்சம்பவத்தால் அக்கிரமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×