search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கைலாசநாதர் கோவிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழாததால் பக்தர்கள் ஏமாற்றம்
    X

    கைலாசநாதர் கோவிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழாததால் பக்தர்கள் ஏமாற்றம்

    • அதிசய நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்வார்கள்.
    • இன்றும், நாளையும் அதிசய நிகழ்வை காண முடியும்.

    தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 21, 22, 23 ஆகிய தேதிகளில் மாலை வேளையில் சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரத்தில் சூரியஒளி ராஜகோபுரம் வழியாக வந்து முன் மண்டபத்தில் அமர்ந்திருக்கும் நந்தி சிலையின் இரு கொம்புகளுக்கும் நடுவே ஊடுருவி கருவறையில் வீற்றிருக்கும் சிவலிங்கத்தின் நெற்றியில் முதல் நாள் ஒளிபடும். 2-ம் நாள் மார்பிலும், 3-ம் நாள் பாதத்திலும் விழும் அதிசய நிகழ்வு நடைபெறும்.

    இந்த அதிசய நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்வார்கள். அதன்படி நேற்றும் பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர். மாலை 6 மணி அளவில் ராஜகோபுரம் வழியாக உள்ளே வந்த சூரிய ஒளி நந்தி சிலையின் கொம்புகளுக்கு நடுவே ஊடுருவி கோவிலின் நடுவே உள்ள உண்டியல் மீது பட்டு மறைந்தது, பக்தர்கள் அதிக அளவில் கூடி கூட்ட நெரிசலை ஏற்படுத்தியதால் ஒளி உள்ளே செல்ல முடியாமல் மறைந்தது. இதனால் சிவலிங்கத்தின் மீது ஒளி விழும் அதிசய நிகழ்வை காண காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் அனைவரும் சாமியை வழிபட்டு சென்றனர். தொடர்ந்து இன்றும், நாளையும் இந்த அதிசய நிகழ்வை காண முடியும்.

    Next Story
    ×