என் மலர்
தமிழ்நாடு
X
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதானவர்கள் ஜாமின் கேட்டு மனு- சி.பி.சி.ஐ.டி. பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
ByMaalaimalar17 Jan 2025 12:47 PM IST
- சின்னதுரை மற்றும் ஷாகுல் ஹமீது ஆகிய இருவரும் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தனர்.
- விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
சென்னை:
கள்ளக்குறிச்சியில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சின்னதுரை மற்றும் ஷாகுல் ஹமீது ஆகிய இருவரும் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தனர்.
இந்த மனு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்த போது, குண்டர் சட்டத்தில் இருவரையும் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளதாகவும், கைது காரணமாக அவர்களின் குடும்ப பெயர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதைக்கேட்ட நீதிபதி, மனுவுக்கு வருகிற 23-ந்தேதிக்குள் பதில் அளிக்கும்படி சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.
Next Story
×
X