என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
அ.தி.மு.க.வை கூட்டணிக்கு பா.ஜ.க. அழைக்கவில்லை- எச்.ராஜா
- கஸ்தூரிக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும்.
- நீதிமன்ற காவலில் இருக்கும் போது தான் சவுக்கு சங்கர் பாதிக்கப்பட்டார்.
புதுக்கோட்டை:
பா.ஜ.க. மாநில ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் எச்.ராஜா புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாங்கள் எந்த கட்சியும் எங்களின் ஏ டீம் பி டீம் என்று கூறவில்லை. நாங்கள் அ.தி.மு.க.வை கூட்டணிக்கு வாருங்கள் என்று கூப்பிடவில்லை. நாங்கள் அழைப்பு விடுத்து இருந்தால் தான் எடப்பாடி பழனிசாமி எங்களை புறக்கணிக்கிறார் என்ற சொல்ல முடியும்.
எனினும் எங்களைப் பொறுத்தவரை இங்கு உள்ளவர்கள் யார் என்ன சொன்னாலும் கூட்டணி குறித்து எங்களது அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். அப்போது அகில இந்திய தலைமை எங்களிடம் பேசுவார்கள். யாருக்கும் கனவு காண உரிமை உள்ளது அதனை என்னால் தடுக்க முடியுமா?. திராவிடம் என்பது இடத்தை குறிக்கும். திராவிடம் என்பது தமிழ் சொல் அல்ல. அது சமஸ்கிருத சொல்.
தென்னிந்தியாவில் உள்ள பிராமணர்களை தான் திராவிடர்கள். அதனை இங்கு உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாரை இதுவரை கைது செய்ய முடியாத காவல்துறை, பிரதமரை தரக்குறைவாக பேசிய தாமு. அன்பரசனை இதுவரை கைது செய்யாமல் மந்திரி சபையிலும் வைத்துள்ளனர். ஆனால் கஸ்தூரியை மட்டும் கைது செய்துள்ளனர்.
அவருக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும். நீதித்துறை தான் அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நீதிமன்ற காவலில் இருக்கும் போது தான் சவுக்கு சங்கர் பாதிக்கப்பட்டார்.
திராவிட கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கு இடம் தந்தது கிடையாது. 1967-ல் இருந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்த தி.மு.க. இதுவரையில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கேற்க வாய்ப்பு கொடுக்கவில்லை.
அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு பாதுகாப்பில்லை. மருத்துவமனையில் டாக்டர் கத்தி வைத்துக் கொள்ளலாம். நோயாளி கத்தி எடுத்து செல்லலாமா? இந்த அரசாங்கம் எல்லாத் துறையிலும் தோற்றுபோன அரசாங்கமாக உள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் பத்தாயிரத்து 500 ஆசிரியர்கள் போலிகள். கல்லூரிகளில் 980 பேராசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பேராசிரியர்களாக இருந்துள்ளனர். இந்த அரசாங்கத்தின் ஒரு துறை கூட திறமையாக செயல்படவில்லை.
எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டத்தான் முடியும். ஆனால் செயல்படுத்த வேண்டியது ஆளும் அரசாங்கம் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்