என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மல்லை சத்யாவுக்கு எதிராக மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது- ம.தி.மு.க.வினருக்கு வைகோ எச்சரிக்கை
    X

    மல்லை சத்யாவுக்கு எதிராக மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது- ம.தி.மு.க.வினருக்கு வைகோ எச்சரிக்கை

    • வருகிற 20-ந்தேதி வைகோ தலைமையில் நடைபெறும் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
    • வைகோவிடம் இருந்து என்னை பிரிக்கும் ஆற்றல் மரணத்துக்கு மட்டுமே உண்டு என்று தனது அரசியல் பயணத்தை பற்றி நீண்ட பதிவை வெளியிட்டு உள்ளார்.

    சென்னை:

    ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும், துரை வைகோ எம்.பி.க்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி தொகுதியில் மல்லை சத்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வருகிற 20-ந்தேதி வைகோ தலைமையில் நடைபெறும் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

    இதற்கிடையில் மேலும் சில மாவட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டித்துள்ளார். கழக கட்டுப்பாட்டுக்கு எதிராக மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்துவது, தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என்று எச்சரித்து உள்ளார். இந்த விவகாரத்துக்கு நிர்வாகக் குழுவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் கூறினார்கள்.

    அதேநேரம் மல்லை சத்யா தனது முகநூல் பக்கத்தில் எனது பாரம்பரியம் என்பது வைகோ பாரம்பரியம் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன். நம்பி கெட்டான் சத்யா என்று வேண்டுமானால் சொல்லலாம்.

    ஆனால் நம்பிக்கை துரோகம் செய்தான் மல்லை சத்யா என்று ஒருபோதும் வரக்கூடாது என்ற உறுதியோடு ம.தி.மு.க.வில் பயணிக்கிறேன்.

    வைகோவிடம் இருந்து என்னை பிரிக்கும் ஆற்றல் மரணத்துக்கு மட்டுமே உண்டு என்று தனது அரசியல் பயணத்தை பற்றி நீண்ட பதிவை வெளியிட்டு உள்ளார். இந்த சிக்கலுக்கு 20-ந்தேதி வைகோ எப்படி தீர்வு காணப்போகிறார் என்பதே ம.தி.மு.க.வினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×