என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி: டாஸ்மாக் ஊழியர்கள் 11-ந்தேதி போராட்டம் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி: டாஸ்மாக் ஊழியர்கள் 11-ந்தேதி போராட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/09/9108619-newproject15.webp)
X
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி: டாஸ்மாக் ஊழியர்கள் 11-ந்தேதி போராட்டம்
By
Maalaimalar9 Feb 2025 10:28 AM IST
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg)
- அலுவலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
- 11-ந்தேதிக்குள் பரிசீலிக்க வாய்ப்பு இல்லை.
சென்னை:
டாஸ்மாக் ஊழியர்கள் 21 ஆண்டுகளாக பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது அந்த கோரிக்கைகள் மீது முன்னுரிமை கொடுத்து தீர்வு காண வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் அலுவலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால் அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி இருப்பதாக கூறி கோரிக்கைகளை 11-ந்தேதிக்குள் பரிசீலிக்க வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.
இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் வருகிற 11-ந்தேதி டாஸ்மாக் நிர்வாக அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
Next Story
×
X