என் மலர்
உலகம்
தாய்லாந்தில் துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி
- பொதுமக்களை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் திடீரென்று சுட்டார்.
- தாக்குதல் சம்பவம் முன்னாள் கிராம தலைவர் வீடு அருகே நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
பாங்காங்:
தாய்லாந்தில் தெற்கில் உள்ள சூரத் தானி மாகாணம் கிரி ராட் நிகோம் பகுதியில் துப்பாக்கி சூடு நடந்தது. பொதுமக்களை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் திடீரென்று சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறியடித்து ஓடினர். இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தாக்குதல் நடத்திய நபர் தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாக்குதல் சம்பவம் முன்னாள் கிராம தலைவர் வீடு அருகே நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
தாய்லாந்தில் சமீபகாலமாக வன்முறை தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த அக்டோபர் மாதம் நாங் புவாலாம் பு மாகாணத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரி நடத்திய தாக்குதலில் 24 குழந்தைகள் உள்பட 36 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்தில் துப்பாக்கி உரிமம் வைத்திருப்பவர்களின் விகிதம் அதிகமாக உள்ளது.