என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
வைரலாகும் ஹாரிபாட்டர் புத்தகம்
ByMaalaimalar14 July 2023 11:11 AM IST
- 1997-ல் வெளிவந்த ஹாரிபாட்டரும், தத்துவ ஞானியின் மந்திரக்கல்லும் என்ற முதல் நாவலை ப்ளூம்ஸ்பரி வெளியிட்டது.
- ஏலத்தில் இந்த புத்தகம் ரூ.11 லட்சத்திற்கு விற்பனையாகி உள்ளது.
உலகம் முழுவதும் பலகோடி சிறுவர்-சிறுமிகளின் ஆதர்ஷ நாயகனான ஹாரிபாட்டரை பற்றிய புத்தகங்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. பிரிட்டனை சேர்ந்த ஜோன் ரவ்லிங் என்ற ஆசிரியர் தனது ஓய்வு நேரத்தில் எழுத தொடங்கிய மந்திர, தந்திர கதைகள் ஹாரிபாட்டர் என்ற டீன் ஏஜ் சிறுவனை நாயகனாக வடிவமைத்து எழுதப்பட்டவை ஆகும்.1997-ல் வெளிவந்த ஹாரிபாட்டரும், தத்துவ ஞானியின் மந்திரக்கல்லும் என்ற முதல் நாவலை ப்ளூம்ஸ்பரி வெளியிட்டது.
லேமினேட் செய்யப்பட்ட அட்டையுடன் கூடிய இந்த புத்தகம் சமீபத்தில் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டது. இந்த புத்தகம் முதல் பதிப்பு 500 புத்தகங்களில் ஒன்றாகும். மேலும் நூலகங்களுக்கு அனுப்பப்பட்ட 300 புத்தகங்களில் ஒன்றாகும். இந்நிலையில் ஏலத்தில் இந்த புத்தகம் ரூ.11 லட்சத்திற்கு விற்பனையாகி உள்ளது. இது தற்போது சமூக வலைதளங்ளில் வைரலாகி உள்ளது.
Next Story
×