என் மலர்
உலகம்
ஆப்கானிஸ்தானில் வீடுகளில் ஜன்னல் வைக்க தடை: தலிபான் அரசு நடவடிக்கை
- பெண்கள் கல்வி கற்கவும், பொது இடங்களுக்கு செல்லவும் தடை.
- பெண்கள் வசிக்கும் பகுதிகளில் வீடுகளில் ஜன்னல் வைக்க தடை.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு தலிபான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பெண்கள் ஆரம்ப கல்வி கற்கவும், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. சமீபத்தில் பெண்கள் பொது இடங்களில் பாடுவதற்கும், கவிதைகள் வாசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தற்போது தலிபான் அரசு ஆப்கானிஸ்தானில் பெண்கள் வசிக்கும் பகுதிகளில் வீடுகளில் ஜன்னல் வைக்க தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
சமையல் அறைகளில் , முற்றங்களில் வேலை செய்யும் பெண்களை பார்ப்பது ஆபாசமான செயல்களுக்கு வழி வகுக்கும் என அந்நாட்டு அரசின் செய்தி தொடர்பாளர் ஜபி ஹில்சா முசாஹித் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே உள்ள வீடுகளில் ஜன்னல்கள் இருந்தால் அதனை மறைக்கும் விதத்தில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்றும், புதிய கட்டிடங்களில் ஜன்னல்கள் இருக்க கூடாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்டை வீட்டாரிடம் இருந்து தொல்லையை தவிர்க்க சுவர் கட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிதாக கட்டப்படும் கட்டுமான தளங்களை பார்வையிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.