என் மலர்
இந்தியா
205 இந்திய சட்டவிரோத குடியேறிகள் நாடுகடத்தல்.. பஞ்சாபில் இறக்கிவிட்ட அமெரிக்க ராணுவ விமானம்
- இந்தியர்கள் பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள்.
- 205 பேரின் குற்றப்பின்னணியை சரிபார்க்க முடிவு.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற அந்நாட்டு அதிபர் டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார்.
இதையடுத்து ஆவணமின்றி அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டினர் விமானம் மூலம் திரும்ப அனுப்பப்பட்டு வருகிறார்கள். அமெரிக்காவில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் ஆவணமின்றி இருப்பதாக கண்டறியப்பட்டது.
இதற்கிடையே முதற்கட்டமாக 205 இந்தியர்கள், அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானத்தில் ஏற்றப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
அந்த விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
விமானத்தில் வரும் இந்தியர்கள் பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் 205 பேரின் குற்றப்பின்னணியை சரிபார்க்கும் நடவடிக்கையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இந்தியர்கள் தரையிறங்கியவுடன் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குச் செல்ல உதவியவர்கள் குறித்த தகவலை பெற விசாரணை நடத்த வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.