search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ரஷியா-உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா உதவமுடியும்: இத்தாலி பிரதமர்

    • ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுக்கு மேலாக போர் நடந்து வருகிறது.
    • அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியா, சீனா மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும் என்றார் அதிபர் புதின்.

    ரோம்:

    ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுக்கு மேலாக போர் நடந்துவருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர அமைதிப் பேச்சு வார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.

    இந்திய பிரதமர் மோடியின் ரஷியா, உக்ரைன் பயணத்துக்கு பிறகு புதின் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

    இந்நிலையில், இத்தாலி சென்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ஜார்ஜியா மெலோனியை சந்தித்துப் பேசினார். அதன்பின் மெலோனி கூறியதாவது:

    ரஷியா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர சீனாவுக்கும் இந்தியாவுக்கும் பங்கு உண்டு என்று நான் நம்புகிறேன்.

    சர்வதேச சட்ட விதிகள் மீறப்பட்டால் குழப்பமும் நெருக்கடியும் உருவாகும். சர்வதேச சட்ட விதிகளை மீறுவது உலகமயமாக்கலுக்கு எதிரானது.

    ரஷியா-உக்ரைன் இடையிலான மோதலை நிறுத்த இந்தியா, சீனா போன்ற நாடுகளால் உதவ முடியும் என நான் நினைக்கிறேன்.

    உக்ரைனை ஆதரிப்பதற்கான தேர்வு எங்களுக்கு முதன்மையானது. இது தேசிய நலன்களின் தேர்வாகும் என தெரிவித்தார்.

    Next Story
    ×