என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பிலிப்பைன்ஸ்
- சவோலா புயல் காரணமாக பிலிப்பைன்சில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 3,87,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
மணிலா:
வெப்ப மண்டல புயலான சவோலா சீனாவின் தெற்கு பகுதியில் உருவானது. இந்தப் புயலால் பிலிப்பைன்சில் கனமழை பெய்யும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி மத்திய பிலிப்பைன்ஸ் மற்றும் லூசோன் தீவுகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தது. ஒருவர் பலியானார்.
இந்நிலையில், பிலிப்பைன்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 3 லட்சத்து 87 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
புயல் கரையைக் கடந்தும் மழை பெய்து வருவதால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே, பிலிப்பைன்சை நோக்கி மேலும் ஒரு வெப்ப மண்டல புயல் வருவதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தொழிலாளர்கள் தங்குமிடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த கட்டிடத்தில் தீ விபத்து.
- சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை மற்றும் மீட்புக்குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.
பிலிப்பைன்ஸில் உள்ள ஆடை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் தங்குமிடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை மற்றும் மீட்புக்குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
- சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
பிலிப்பைன்சின் மின் டானோ பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.4 புள்ளிகளாக பதிவானது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
- ஷோல் (shoal) என்பது அதிக ஆழமில்லாத ஒரு சிறிய கடற்கரை பகுதியாகும்
- இக்கப்பலால் சீனாவிற்கும், பிலிப்பைன்ஸிற்கும் இடையே சச்சரவு எழுந்துள்ளது
வட சீன கடலில் இணையும் மலேசியா, வியட்னாம், ப்ரூனே, தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடல் பகுதிகள் அனைத்தும் தனக்கு சொந்தமானது என சீனா உரிமை கொண்டாடி வருகிறது.
பிலிப்பைன்ஸிற்கு சொந்தமான பலவான் எனும் தீவிலிருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, இரண்டாம் தாமஸ் ஷோல். ஷோல் (shoal) என்பது அதிக ஆழமில்லாத ஒரு சிறிய கடற்கரை பகுதியாகும்.
பிஆர்பி ஸியர்ரா மேட்ரே எனும் பிலிப்பைன்ஸ் நாட்டு போர்கப்பல், இரண்டாம் உலக போரில் பயன்பட்டு வந்தது. இதன் பயன்பாட்டு காலம் முடிவடைந்ததும் அக்கப்பலை பிலிப்பைன்ஸ் இரண்டாம் தாமஸ் ஷோல் பகுதியில் நிறுத்தியது. அக்கப்பலை பிலிப்பைன்ஸ் நாட்டின் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த பிற கப்பல்களின் பல்வேறு பயன்பாடுகளுக்கு ஒரு தளமாக பிலிப்பைன்ஸ் பயன்படுத்தி வந்தது.
அப்பகுதிக்கு அருகில் உள்ள மிஸ்சீஃப் ரீஃப் எனும் கடற்பாறை பகுதியை 1995-ல் சீனா கைப்பற்றியதற்கு பதிலடியாக பிலிப்பைன்ஸ் அக்கப்பலை இரண்டாம் தாமஸ் ஷோல் பகுதியில் 1999-ல் நிலைநிறுத்தியது.
தற்போது இக்கப்பலால் சீனாவிற்கும், பிலிப்பைன்ஸிற்கும் இடையே சச்சரவு எழுந்துள்ளது.
அக்கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும் ஷோல் தங்களுக்கு சொந்தமான ரெனாய் ஜியாவ் பகுதி என்றும் பிலிப்பைன்ஸ் அந்த இடத்தில் வேண்டுமென்றே, சட்டவிரோதமாக அக்கப்பலை நிறுத்தியிருப்பதாகவும் அதனை உடனே அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து சீனா வலியுறுத்தி வருகிறது.
இக்கப்பலில் உள்ளவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை கொண்டு சென்ற ஒரு சிறிய கப்பல் மீது தனது நாட்டு கப்பல் ஒன்றிலிருந்து சீனா நீர் பாய்ச்சும் இயந்திரங்களை கொண்டு நீரை பாய்ச்சி விரட்ட முயற்சித்ததாக பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டியது.
இந்நிலையில் நேற்று மீண்டும் ஒருமுறை சீனா இக்கப்பலை அப்புறப்படுத்த வலியுறுத்தியது. இதற்கு பிலிப்பைன்ஸ் மறுப்பு தெரிவித்து விட்டது.
இப்பிரச்சனையை பன்னாட்டு அரசியல் நிபுணர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
- பிலிப்பைன்ஸ் நாட்டில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
- இதில் இந்திய மாணவரும் அவரது பயிற்சியாளரும் உயிரிழந்தனர்.
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டின் இலோகோஸ் வடக்கு மாகாணத்தில் லாவோக் என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தில் செஸ்னா 152 எனப்படும் ஒரு சிறிய ரக பயிற்சி விமானத்தில் இந்திய மாணவர் அன்ஷும் ராஜ்குமார் பயிற்சி மேற்கொண்டு இருந்தார். அவருடன் விமானத்தின் பயிற்சியாளரும் உடன் இருந்துள்ளார்.
துகுகேராவ் விமான நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த விமானம், திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதில் விமானம் விபத்துக்கு உள்ளானது தெரியவந்தது.
விபத்துக்கு உள்ளான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த விமானத்தில் பயணம் செய்த அன்ஷும் ராஜ்குமார் மற்றும் அவருடைய பயிற்சியாளர் இருவருமே பலியாகினர். இருவரது உடல்களையும் மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- ஒருவர், காதல் ஜோடிக்கு புயலோ, வெள்ளமோ தடையாக இல்லை என பதிவிட்டார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் டோக்சுரி என பெயரிடப்பட்ட புயல் கடுமையாக தாக்கியதில் அங்குள்ள பல மாகாணங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது.
இந்நிலையில் அந்நாட்டை சேர்ந்த ஒரு தம்பதியினர் வெள்ளத்தில் நடந்து சென்று திருமணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மலோலோஸ் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் வெள்ளநீர் சூழ்ந்து இருப்பதையும், அந்த தேவாலயத்துக்கு மணமகள் டயான் விக்டோரியானோ வெள்ளத்தில் நடந்து செல்வதையும் காண முடிகிறது. பின்னர் தேவாலயத்துக்கு சென்று மணமக்கள் திருமணம் செய்து கொண்ட நிலையில், இதுதொடர்பான வீடியோ பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.
இதை பார்த்த பயனர்கள் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், காதல் ஜோடிக்கு புயலோ, வெள்ளமோ தடையாக இல்லை என பதிவிட்டார். மற்றொரு பயனர், கடற்கரை கல்யாணம் போல் உள்ளது. மணல் குறைவு என வேடிக்கையாக பதிவிட்டுள்ளார்.
- பலத்த காற்று காரணமாக பயணிகள் படகின் ஒரு பக்கமாக நின்றதால் பாரம் தாங்காமல் படகு ஏரியில் கவிழ்ந்தது.
- தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே லகுனா ஏரியில் உள்ள தலிம் தீவுக்கு படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. பினாங் கோனான் நகராட்சியில் இருந்து புறப்பட்டு வந்த அந்த படகில் 70 பேர் பயணம் செய்தனர்.
அந்த படகில் 42 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஆனால் அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றி கொண்டு சென்றதால் படகு தள்ளாடியபடி சென்றது. அப்போது பலத்த காற்று காரணமாக பயணிகள் படகின் ஒரு பக்கமாக நின்றதால் பாரம் தாங்காமல் படகு ஏரியில் கவிழ்ந்தது.
இதனால் படகில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 30 பேர் பலியானார்கள். 40 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மேலும் சிலர் மாயமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தேடி வருகிறார்கள்.
- மறுபகிர்வு செய்யப்பட்ட விவசாய நிலங்களிலிருந்து அரசுக்கு வரவேண்டிய தொகை செலுத்தப்படாமல் உள்ளது.
- இந்தப் பெரிய கடனை செலுத்துவதற்கு இந்த விவசாயிகளுக்கு எந்த வழியும் இல்லை என அதிபர் தெரிவித்தார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், அந்நாட்டு அதிபர் பெர்டினண்ட் மார்கோஸ், 5 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளின் நிலம் தொடர்பான ரூ.8600 கோடிக்கும் மேற்பட்ட கடன் தொகையை தள்ளுபடி செய்திருக்கிறார்.
1986 ஆம் ஆண்டு மக்கள் கிளர்ச்சியில் மார்கோஸின் தந்தை அதிபர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அது நடந்து ஒரு வருடத்திற்கு பிறகு இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் கீழ், நாட்டின் நிலப்பரப்பில் 16% அளவிற்கு சுமார் 50 லட்சம் ஹெக்டேர் நிலங்கள், கிட்டத்தட்ட 30 லட்சம் நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 10 லட்சம் ஹெக்டேர் மறுபகிர்வு செய்யப்பட்ட விவசாய நிலங்களிலிருந்து அரசுக்கு வரவேண்டிய தொகை , செலுத்தப்படாமல் போய்விட்டதாலும், நாட்டின் பொருளாதார உற்பத்தியில் பண்ணைத்துறையின் பங்களிப்பு சுருங்கி வருவதாலும், பிலிப்பைன்ஸ் நாட்டின் பாராளுமன்றம் இந்த புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
சுமார் 35 வருடத்திற்கும் முன்பாக, 1988 நில சீர்திருத்த திட்டத்தின் கீழ், 30 ஆண்டு கால நிலுவைத் திட்டத்தில் நிலங்கள் விவசாயத்திற்காக வழங்கப்பட்டது. ஆனால் விவசாயிகளால் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை.
தற்போது பெர்டினண்ட் மார்கோஸ் கையொப்பமிட்டுள்ள "புதிய விவசாய விடுதலைச் சட்டம்" விவசாயிகளின் சொத்துக்கள் தொடர்பான அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்திருக்கிறது.
ஜனாதிபதி மாளிகையில் இச்சட்டத்தில் கையெழுத்திடும் விழாவில் அந்நாட்டு அதிபரும், விவசாய அமைச்சருமான மார்கோஸ் கூறியதாவது:
இந்தப் பெரிய கடனை செலுத்துவதற்கு இந்த விவசாயிகளுக்கு எந்த வழியும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம். எனவே, அரசாங்கம் இதனை ஏற்பதே சரியான செயல். அரசாங்க வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ததன் மூலம் நாட்டு மக்களுக்கு உணவளிப்பதற்காக நாங்கள் அனைத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம். இந்த தள்ளுபடியினால் 610,000க்கும் மேற்பட்ட நில சீர்திருத்த பயனாளிகள் பலனடைவார்கள். அதே சமயம் அரசாங்கத்திற்கு இதனால் ரூ.8600 கோடிக்கும் மேல் (1.04 பில்லியன் டாலர்) செலவாகும். குத்தகைதாரர்களுக்கு அளிப்பதற்காக நில உரிமையாளர்களிடம் பெற்ற நிலங்களுக்கு ஈடாக அந்த உரிமையாளர்களுக்கு வழங்க அரசாங்கம் மேலும் ரூ.30 கோடிக்கும் அதிகமாக செலவிட வேண்டும். நாம் விவசாயத் துறைக்கு புத்துயிர் அளிக்க வேண்டும்.
இவ்வாறு மார்கோஸ் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, பிலிப்பைன்ஸ் நாட்டில் வெங்காயம் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பண்ணை பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் அரிசி இறக்குமதி அதிகரித்ததுள்ளது.
விவசாயத்தை காக்க நாடு எடுத்திருக்கும் பெரிய முயற்சியாக இதனை வல்லுனர்கள் வர்ணிக்கின்றனர்.
- சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
- பிலிப்பைன்ஸ் நாடு, பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்திருப்பதால் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை வெடிப்புகள் நடந்து வருகிறது.
மணிலா:
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் மணிலாவில் இருந்து தென்மேற்கே 140 கி.மீ. தொலைவில் உள்ள ஹூகேவில் இன்று காலை நிலநடுக்கம் உண்டானது.
இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது என்றும் 120 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்தது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
பிலிப்பைன்ஸ் நாடு, பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்திருப்பதால் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை வெடிப்புகள் நடந்து வருகிறது.
தற்போது பிலிப்பைன்சில் மயோன் எரிமலை வெடித்து சிதறி வருவதால் வடகிழக்கு அல்பே மாகாணத்தில் இருந்து சுமார் 18 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த கப்பல் 1,089 பேருடன் கடலில் மூழ்கியது.
- கப்பலின் சிதைவுகளை தேடும் பணி கடந்த 6-ந் தேதி தொடங்கியது.
மணிலா :
2-ம் உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலக்கட்டமான 1942-ம் ஆண்டு ஜப்பான் நாட்டுக்கு சொந்தமான 'மான்டிவீடியோ மாரு' என்ற கப்பல் நூற்றுக்கணக்கான ஆஸ்திரேலிய போர் கைதிகளை ஏற்றிக்கொண்டு பப்புவு நியூ கினியாவில் இருந்து சீனா நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்த கப்பல் பிலிப்பைன்ஸ் நாட்டு கடலில் சென்றபோது, அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் அதனை தாக்கியது. ஆஸ்திரேலிய போர் கைதிகள், ஜப்பான் ராணுவ வீரர்கள் மற்றும் நார்வே மாலுமிகள் என 1,089 பேருடன் கப்பல் கடலில் மூழ்கியது. இது இன்றளவும் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான கடல்சார் பேரழிவாக பாா்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த பேரழிவு நிகழ்ந்து 81 ஆண்டுகளுக்கு பிறகு கப்பலின் சிதைவுகளை தேடும் பணி கடந்த 6-ந் தேதி தொடங்கியது. புக்ரோ என்ற நெதர்லாந்து ஆழ்கடல் ஆய்வு நிறுவனத்தின் உதவியுடன் ஆஸ்திரேலிய கடல்சார் தொல்லியல் குழுவான சைலன்ட்வேர்ல்ட் அறக்கட்டளை, இந்த பணியை மேற்கொண்டது.
உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தேடுதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பணி தொடங்கிய 14 நாட்களுக்கு பிறகு கடலின் மேல்மட்டத்தில் இருந்து 13 ஆயிரத்து 123 அடி ஆழத்தில் கப்பலின் சிதைவுகள் கண்டு பிடிக்கப்பட்டன.
- தீ விபத்தில் சிக்கி 2 வயது பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் உடல் கருகி பலியாகினர்.
- ஒரே சமயத்தில் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் தீப்பற்றி எரிந்ததில் அந்த பகுதியே புகை மண்டலமானது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் ரிசல் மாகாணம் டெய்டே நகரில் அடுக்கடுக்கான வீடுகளை கொண்ட குடியிருப்பு பகுதி உள்ளது.
நேற்று முன்தினம் இரவு இந்த குடியிருப்பு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. அங்குள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த வீடுகளுக்கு பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
இதனால், ஒரே சமயத்தில் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் தீப்பற்றி எரிந்ததில் அந்த பகுதியே புகை மண்டலமானது. இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர்.
எனினும் தீ விபத்தில் சிக்கி 2 வயது பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தீ விபத்தால் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை இழந்து, தங்குவதற்கு இடமின்றி தவித்து வருகின்றன.
- பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
மணிலா:
பிலிப்பைன்சில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்