search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்திற்கு பிறகு சினிமா தியேட்டர்கள் திறப்பு
    X

    ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்திற்கு பிறகு சினிமா தியேட்டர்கள் திறப்பு

    • ஒரு வருடத்துக்கு பிறகு சினிமா தியேட்டர்களை திறக்க தலிபான்கள் அனுமதி அளித்துள்ளனர்.
    • பெண்கள் சினிமாவில் நடிக்க தலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

    காபூல்:

    20 வருட போருக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த ஆண்டு ஆட்சியை கைப்பற்றினார்கள். அவர்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்து ஒரு வருடம் முடிந்துள்ளது.

    தலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் அவர்கள் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். பெண்கள் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்று கூறியுள்ளனர்.

    பெண்கள் வெளியே வந்தால் உடலை முழுவதும் மூடியபடி வர வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பெண்கள் மேல்நிலை கல்வி கற்க தடை பிறப்பித்துள்ளனர். கல்விக்காக வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சினிமா தியேட்டர்களையும் மூடிவிட்டனர். இந்த நிலையில் ஒரு வருடத்துக்கு பிறகு சினிமா தியேட்டர்களை திறக்க தலிபான்கள் அனுமதி அளித்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்துக்கு பிறகு மீண்டும் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளன.

    ஆனாலும் பெண்கள் சினிமாவில் நடிக்க தலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்படும் நிலையில் அங்கு 37 சினிமா படங்களும், சில ஆவணப்படங்களும் திரையிட தயாராக உள்ளன.

    ஆனால் இந்த அனைத்து படங்களிலும் நடிகையாக அதிபா முகமது என்ற பெண் மட்டுமே நடித்துள்ளார்.

    Next Story
    ×