search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காமாட்சி அம்மன் கோவில் சொத்து அபகரிப்பு வழக்கு: மேலும் சிக்கும் அதிகாரிகள்?
    X

    காமாட்சி அம்மன் கோவில் சொத்து அபகரிப்பு வழக்கு: மேலும் சிக்கும் அதிகாரிகள்?

    • நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததுடன், வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்துவிட்டதாக கோவில் நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
    • இடைக்கால விசாரணை அறிக்கை சமர்பிக்க புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியின் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றான காமாட்சி அம்மன் கோவிலுக்கு புதுச்சேரி ரெயின்போ நகரில் ரூ.50 கோடி மதிப்புள்ள 64,000 சதுரடி நிலம் உள்ளது.

    அந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததுடன், வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்துவிட்டதாக கோவில் நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து நிலம் கிரயம் செய் யப்பட்ட காலகட்டமான 2021-ல் தாசில்தாராக இருந்த பாலாஜியும், நில அளவைத் துறையின் இயக்குனராக இருந்த ரமேஷ், சார் பதிவாளர் சிவசாமி உள்பட 17 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த சொத்தினை தனது குடும்பத்தினருக்கு வாங்கிய விவகாரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், அவரது மகன் ரிச்சர்ட்ஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என தி.மு.க., - காங்., கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தின.

    காமாட்சியம்மன் கோவில் சொத்துகளை பொருத்தவரை, ஜான்குமார் எம்.எல்.ஏ., குடும்பத்தினர் 4 பேர் உள்பட மொத்தம் 22 பேர் வாங்கி இருந்தனர்.

    கோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில் வாங்கிய கோவில் இடங்களை யாரும் ஒப்படைக்கவில்லை.இதனையடுத்து கலெக்டர் வல்லவன் உத் தரவின்பேரில் காமாட்சி யம்மன் கோவில் சொத்துகளை கையகப் படுத்தி, இந்து அறநிலையத் துறை முன்னிலையில் கோவில் நிர்வாகிகளிடம் கடந்த ஆகஸ்டு மாதம் ஒப்ப டைக்கப்பட்டது.

    இதற்கிடையே காமாட்சியம்மன் கோவில் சொத்து தொடர்பான வழக்கு, கடந்த 13-ந் தேதி சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப் போது, கோவில் சொத்து விவகாரத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டவர்களின் விபரங்களுடன், இடைக்கால விசாரணை அறிக்கை சமர்பிக்க புதுச் சேரி சி.பி.சி.ஐ.டி. போலீ சாருக்கு உத்தரவிட்டது.

    இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் காமாட்சியம்மன் கோவில் சொத்து சம்பந்தமாக இடைக்கால அறிக்கையை சீலிட்ட கவரில் சென்னை ஐகோர்ட்டில் சமர்ப்பித்துள்ளனர்.

    இதில் கோவில் சொத்துக்கள் அபகரிப்பில் மேலும் உழவர்கரை தாசில்தாரர்களாக பணியாற்றிய மேலும் சில அதிகாரிகள் சிக்குவார்கள் என தெரிகிறது. அந்த அதிகாரிகள் தற்போது தேர்தல் பணி மற்றும் வருவாய்த்துறை அலுவலக பணியில் உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×