search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் அரசு அலுவலகங்களில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி- கவர்னர் மாளிகையில் தமிழிசை குறைகேட்டறிந்தார்
    X

    புதுவையில் அரசு அலுவலகங்களில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி- கவர்னர் மாளிகையில் தமிழிசை குறைகேட்டறிந்தார்

    • மாதந்தோறும் 15ம் தேதி அரசு அலுவலகங்களில் மக்கள் சந்திப்பு நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.
    • விதவை பெண் தனக்கு வருமானம் கிடைக்கும் வகையில் வேலை வாங்கித்தரும்படி கோரிக்கை வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை மாதத்தின் முதல்நாள் அரசு ஊழியர்கள் பாரம்பரிய உடை அணிந்து அலுவலகம் வர வேண்டும்.

    மாதந்தோறும் 15-ந் தேதி அரசு அலுவலகங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும். அதில் உயரதிகாரிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.

    இந்நிலையில் இம்மாதம் 15-ந் தேதியான இன்று புதுவையில் உள்ள அரசு அலுவலகங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

    கவர்னர் மாளிகையில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, கல்மேடுபட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மனைவி அஞ்சலை(67). கவர்னரிடம் மனு அளித்தார். அதில், தனது வீட்டையும், சுற்றியுள்ள நிலத்தையும் 2-வது மகள் அபகரித்துவிட்டதாகவும், அதை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

    இதேபோல கோர்க்காடை சேர்ந்த விதவை பெண், தனது மகனை தனியார் பள்ளியில் படிக்க வைப்பதாகவும், கட்டணம் செலுத்த முடியாததால் பள்ளியிலிருந்து வெளியே அனுப்பிவிட்டதால், அரசு பள்ளியில் சேர்க்க உதவ வேண்டும். தனக்கு வருமானம் கிடைக்கும் வகையில் வேலை வாங்கித்தரும்படியும் கோரிக்கை வைத்தார்.

    இதேபோல் பெரியவர் ஒருவர் தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் மிரட்டுவதாக பென்டிரைவ்வில் ஆதாரத்துடன் புகார் செய்தார்.

    கவர்னர் மாளிகையில் சந்தித்த பலர் நிலமோசடி தொடர்பாகவே புகார் அளித்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கவர்னர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். சம்பந்த ப்பட்ட அதிகாரிகளுக்கு மனுவை அனுப்பி வைத்தார்.

    புதுவை தலைமை செயலகம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் இன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர்.

    Next Story
    ×