என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
மாநில அந்தஸ்து கேட்டு புதுவை சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானம்: சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பேட்டி
- முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடர்ந்து மாநில அந்தஸ்து கோரி வருகிறார்.
- பிரதமர், உள்துறை மந்திரி, மத்திய மந்திரிகளை அனைத்து எம்.எல்.ஏ.க்களோடு முதல்-அமைச்சர் தலைமையில் சந்தித்து மாநில அந்தஸ்தை வலியுறுத்துவோம்.
புதுச்சேரி:
யூனியன் பிரதேசமான புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது.
புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி ஏற்கனவே 13 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை மாநில அந்தஸ்து கிடைக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் மாநில அந்தஸ்து பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
புதுவையில் பா.ஜனதா-என்ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மத்திய ஆட்சியாளர்களோடு இணக்கமான ஆட்சி புதுவையில் நடந்து வருவதால் இந்த காலக்கட்டத்தில் மாநில அந்தஸ்து கிடைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலிலும் மாநில அந்தஸ்து பெறுவோம் என அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்குறுதி அளித்தன.
கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு 14-வது முறையாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் கடந்த ஜூலை மாதம் கவர்னர் தமிழிசை ஒப்புதலோடு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் புதுவை அரசின் தீர்மானத்திற்கு மத்திய அரசு கடிதம் மூலம் பதிலளித்துள்ளது.
இந்த கடிதத்தில் தற்போதைய நிலையே புதுவையில் தொடரும் என குறிப்பிட்டுள்ளது. இதனால் யூனியன் பிரதேசமாகவே புதுவை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது புதுவை அரசியல் கட்சிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சட்டசபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
மாநில அந்தஸ்து வழங்க முடியாது என மத்திய அரசு தெரிவிக்கவில்லை. தற்போதைய நிலையே தொடரும் என தெரிவித்துள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அனுப்பப்பட்ட தீர்மானங்களை பற்றி மத்திய அரசு தெரிவிக்கவில்லை. 2022-23-ம் ஆண்டில் புதுவை சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மாநில அந்தஸ்தை வலியுறுத்திய அரசு தீர்மானத்தின் மீது மத்திய அரசு பதிலளித்துள்ளது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடர்ந்து மாநில அந்தஸ்து கோரி வருகிறார். மீண்டும் சட்டசபையில் மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் கொண்டு வரப்படும். பிரதமர், உள்துறை மந்திரி, மத்திய மந்திரிகளை அனைத்து எம்.எல்.ஏ.க்களோடு முதல்-அமைச்சர் தலைமையில் சந்தித்து மாநில அந்தஸ்தை வலியுறுத்துவோம்.
நிதி கமிஷனில் புதுவையை சேர்க்க வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது. நிதி கமிஷனில் முதலில் புதுவை சேர்க்கப்படும். பின்னர் மாநில அந்தஸ்து கோரிக்கை வலுப்பெறும். சிலவற்றில் மட்டும்தான் மத்திய அரசு புதுவையை யூனியன் பிரதேசமாக கருதுகிறது. மற்ற அனைத்து விஷயங்களிலும் மாநிலமாகவே கருதுகிறது. அதன்படி புதுவையிலேயே உள்ள அதிகாரத்தை பயன்படுத்திக்கொள்ள மத்திய உள்துறை தெரிவிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்