என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி தொகுதி பா.ஜ.க.வேட்பாளர் தேர்வு தீவிரம்
- தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்.
- அடுத்தக்கட்டமாக பேச்சு வார்த்தை நடத்தப்படும்' என்றார்.
புதுச்சேரி:
புதுச்சேரி தொகுதியில் பா.ஜனதா போட்டியிடுகிறது. வேட்பாளர் தேர்வு குறித்து, முதலமைச்சர் ரங்கசாமியுடன் பா.ஜனதா, மேலிடப் பொறுப்பாளர் ஆலோசனை நடத்தினார்.
பா.ஜனதா, மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் அடங்கிய குழுவினர் 2-வது முறையாக முதலமைச்சர் ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தை 30 நிமிடம் வரை நீடித்தது.
கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில்,
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். அதற்கேற்ற வியூகங்களை வகுக்க வேண்டும் என்பதே முதலமைச்சர் மற்றும் பா.ஜனதாவினரின் எண்ணம் அதுகுறித்து விவாதித்தோம். அடுத்தக்கட்டமாகவும் பேச்சு வார்த்தை நடத்தப்படும்' என்றார்.
பா.ஜனதா வேட்பாளரை இறுதி செய்ய முடியவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜனதாவில் வேட்பாளரை முடிவு செய்யவில்லை என்று யார் சொன்னது? அதுபோன்ற குற்றச்சாட்டு ஏதும் இல்லை. லோக்சபா தேர்தலில் பா.ஜ.க, சார்பில் போட்டியிட பலரும் சீட் கேட்டுள்ளனர். நேரம் வரும் போது அதிகாரப்பூர்வமாக அறிப்போம் என்றார்.