என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
நிர்வாணமாக வீடியோ கால் பேசிய தாயை கொன்ற என்ஜினீயருக்கு ஆயுள் தண்டனை- புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு
- கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி நள்ளிரவு ஜெயமேரி செல்போனில் வீடியோகால் மூலம் வேறு நபருடன் நிர்வாணமாக பேசிக்கொண்டு இருந்தார்.
- வழக்கில் அமலோற்பவநாதன் மீதான கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ராஜசேகர உடையார். அவரது 2-வது மனைவி ஜெயமேரி (வயது 51). இவர்களது மகன் அமலோற்பவ நாதன் (28). பி.டெக் என்ஜினீயர்.
சொத்து தகராறு காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு ராஜசேகர உடையார் முதல் மனைவியின் உறவினரான மணவாளன் கொலை வழக்கு தொடர்பாக ஜெயமேரி கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் ஜாமீனில் வந்த அவர் லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் விரிவாக்கம் 20-வது குறுக்கு தெருவில் தனது மகனுடன் வசித்து வந்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி நள்ளிரவு ஜெயமேரி செல்போனில் வீடியோகால் மூலம் வேறு நபருடன் நிர்வாணமாக பேசிக்கொண்டு இருந்தார்.
இதனை பார்த்த மகன் அமலோற்பவநாதன், மிகுந்த கோபமடைந்தார். இந்த வயதில் வேறுநபருடன் வீடியோ கால் மூலம் நிர்வாணமாக பேசுகிறாயே என கேட்டு ஆத்திரத்தில் வீட்டில் கிடந்த நாற்காலியால் தாய் என்றும் பாராமல் ஜெயமேரியை சரமாரியாக தாக்கினார்.
இதில் காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். பின்னர் சமையல் அறையில் இருந்த கத்தியால் 12 முறை தாயை அமலோற்பவநாதன் குத்தி கொலை செய்தார். அதன்பின் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
இந்த கொலை தொடர்பாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அமலோற்பவநாதனை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அமலோற்பவநாதன் மீதான கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டு நீதிபதி இளவரசன் முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது.
இந்த வழக்கில் அமலோற்பவநாதன் மீதான கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்