என் மலர்
புதுச்சேரி
X
புதுச்சேரி அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிய வேண்டும்- கவர்னர் தமிழிசை உத்தரவு
BySuresh K Jangir25 Jan 2023 2:11 PM IST
- புதுவையில் மாதத்தில் முதல் நாள் பாரம்பரிய ஆடை தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
- பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு கண்டு, அதை ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் துறைத் தலைவர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
புதுவையில் மாதத்தில் முதல் நாள் பாரம்பரிய ஆடை தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அந்த நாளில் அனைத்து அரசு ஊழியர்களும் பாரம்பரியமான கதராடைகளை அணிந்து, கைத்தறி தினமாக கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரரராஜன் அரசுத்துறைகளுக்கு அனுப்பிய மற்றொரு உத்தரவில், "மாதம் தோறும் 15-ந் தேதி மக்கள் குறைகளைத் தீர்க்கும் வகையில் அனைத்துத் துறைகளிலும் மனுக்களைப் பெற வேண்டும்.
இந்த மனுக்களுக்கு தனியாக கோப்புகளைத் தயார் செய்து வைத்து, தீர்வு காண வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு கண்டு, அதை ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
X