search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வாகனம் மோதி பலியாவோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு: போக்குவரத்து துறை அறிவிப்பு
    X

    வாகனம் மோதி பலியாவோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு: போக்குவரத்து துறை அறிவிப்பு

    • மோட்டார் வாகன விபத்து நிதியம் என்ற நிதி உருவாக்கப்பட்டு உள்ளது.
    • இழப்பீடு விசாரணை அதிகாரி விண்ணப்பம் பெற்ற ஒரு மாதத்திற்குள் அவருடைய விசாரணை அறிக்கையை இழப்பீடு தீர்வை அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையானது, இதுவரை செயல்பாட்டில் இருந்த கருணைத்திட்ட ம் 1989 - ஐ மாற்றி, அடையாளம் தெரியாத வாகனங்களால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் 2022' என்ற புதிய திட்டம் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டது.

    தற்போது இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி அடையாளம் தெரியாத வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக மோட்டார் வாகன விபத்து நிதியம் என்ற நிதி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அடையாளம் தெரியாத வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் உயிரிழப்போருக்கு இழப்பீடாக ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.

    இந்த திட்டத்தால் இழப்பீடு பெறும் வழிமுறை வருமாறு:-

    அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்படும் நபர் அல்லது இறந்தவரின் உறவினர் முதலில் இழப்பீடு விசாரணை அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும். (புதுச்சேரி- மாவட்ட துணை கலெக்டர், காரைக்கால்- காரைக்கால் டவுன் தாசில்தார்.)

    இழப்பீடு விசாரணை அதிகாரி விண்ணப்பம் பெற்ற ஒரு மாதத்திற்குள் அவருடை ய விசாரணை அறிக்கையை இழப்பீடு தீர்வை அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    விசாரணை அறிக்கையை ஆய்வு செய்து தீர்வை அதிகாரி 15 நாட்களுக்குள் நஷ்ட ஈடுக்கான ஆணையை ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சிலுக்கு அனுப்பி வைக்க வேண் டும். அதனை பெற்ற ஜெனரல் இன்ஸ்சூரன்ஸ் கவுன்சில் 15 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு தொகையை வழங்க வேண்டும்.

    இந்த நடவடிக்கைகளை ஆய்வு செய்ய புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்திற்கு தலா ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×