search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேதா நிலையம்Jayalalithaa Memorial"

    ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் அளித்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அரசு வக்கீலுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா நிலையம் இல்லம் உள்ளது.

    இந்த இல்லத்தை நினைவு இடமாக மாற்ற கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் சென்னை ஜகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    சட்டபடியான வாரிசுதாரர்களான எங்களிடம் கருத்துகேட்காமல் அரசு முடிவு எடுத்து உள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும் என கூறி இருந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சே‌ஷசாயி அரசு உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். ஜெயலலிதாவிற்கு ஏற்கனவே மெரினா கடற்கரையில் நினைவிடம் இருக்கும் போது மற்றொரு நினைவகத்தை மக்களின் வரிபணத்தில் உருவாக்குவதை ஏற்கமுடியாது.

    தீபக்-தீபா

    இந்த வேதா நிலையத்தின் சாவி சென்னை மாவட்ட கலெக்டரிடம் உள்ளது. அந்த சாவியை மூன்று வாரத்திற்குள் தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் சென்னை ஜகோர்ட்டு தீர்ப்பின் நகலை இணைத்து சென்னை மாவட்ட கலெக்டரிடம் தீபா மற்றும் தீபக் ஆகியோர் இன்று மனு கொடுத்தனர். அந்த மனுவில் போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்ல சாவியை அரசு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

    இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அரசு வக்கீலுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.


    ×