என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 11 women missing
நீங்கள் தேடியது "11 women missing"
பீகார் மாநிலத்தில் பாலியல் வழக்கில் சிக்கிய தொண்டு நிறுவனம் நடத்தி வரும் மற்றொரு காப்பகத்தில் தங்கியிருந்த 11 பெண்களைக் காணவில்லை. #BiharWomenMissing #MuzaffarpurShelterHome
முசாபர்பூர்:
பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் மாநில அரசு உதவி பெறும் சிறுமிகள் பாதுகாப்பு இல்லம் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு 4 வயது முதல் 18 வயது வரையுள்ள பேச்சு குறைபாடு கொண்ட 44 சிறுமிகள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த சிறுமிகளில் பலரை இல்லத்தின் உரிமையாளரும், பணிபுரியும் ஊழியர்கள் சிலரும் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாக மும்பையைச் சேர்ந்த டாடா சமூக அறிவியல் நிறுவனம் கடந்த மே மாதம் நடத்திய தணிக்கையின் போது அறிக்கையாக வெளியிட்டது. இது தொடர்பாக முசாபர்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாதுகாப்பு இல்லத்தின் உரிமையாளர் பிரிஜேஷ் தாகூரை கைது செய்தனர். தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
குழந்தைகள் காப்பக விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததும், இந்த மகளிர் காப்பகத்தில் சமூக நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, 11 பெண்கள் மாயமானது தெரியவந்துள்ளது. காணாமல் போன பெண்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். #BiharWomenMissing #MuzaffarpurShelterHome
பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் மாநில அரசு உதவி பெறும் சிறுமிகள் பாதுகாப்பு இல்லம் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு 4 வயது முதல் 18 வயது வரையுள்ள பேச்சு குறைபாடு கொண்ட 44 சிறுமிகள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த சிறுமிகளில் பலரை இல்லத்தின் உரிமையாளரும், பணிபுரியும் ஊழியர்கள் சிலரும் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாக மும்பையைச் சேர்ந்த டாடா சமூக அறிவியல் நிறுவனம் கடந்த மே மாதம் நடத்திய தணிக்கையின் போது அறிக்கையாக வெளியிட்டது. இது தொடர்பாக முசாபர்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாதுகாப்பு இல்லத்தின் உரிமையாளர் பிரிஜேஷ் தாகூரை கைது செய்தனர். தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பிரிஜேஷ் தாகூரின் தொண்டு நிறுவனம் நடத்தி வந்த பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் இருந்த 11 பெண்கள் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இது குறித்து பிரிஜேஷ் தாகூர் மீது முசாபர்பூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பீகார் அரசின் சமூக நலத்துறை உதவி இயக்குனர் அளித்த புகாரின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
×

X