என் மலர்
நீங்கள் தேடியது "2 People Injury"
தேவதானப்பட்டி அருகே கோவில் விழாவில் ஏற்பட்ட மோதலில் பெண் உள்பட 2 பேர் காயமடைந்ததையடுத்து 10 மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டியில் பட்டாளத் தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். அப்போது அதே பகுதி பகவதிநகரை சேர்ந்த சின்னசாமி, பாரதி, பாலசந்திரன் உள்ளிட்ட சிலர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தனர். இதை ஊர்வலத்தில் வந்த அழகர் (38) என்பவர் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த கும்பல் அழகரை தாக்கி சரமாரியாக தாக்கினர். ஊர்வலத்தில் வந்த காளிதாஸ் மனைவி நாகலட்சுமி என்வரையும் கும்பல் தாக்கியது. இதில் அவர்கள் காயம் அடைந்தனர். இதுபற்றி தேவதானப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் சின்னசாமி, பாரதி உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் தங்கபாண்டி, பாண்டிகார்த்திக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.