என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 20 assembly by election
நீங்கள் தேடியது "20 Assembly by election"
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் காலியாக உள்ள 20 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. #ElectionCommission #TNElections
சென்னை:
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு காரணமாக திருவாரூர் தொகுதியும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மறைவால் திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளது.
இதே போல் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சபாநாயகரின் நடவடிக்கை செல்லும் என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இதனால் தமிழகத்தில் 20 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. காலியான 6 மாதத்துக்குள் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது தேர்தல் கமிஷன் விதி.
இதனால் 5 மாநில சட்டசபை தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தகுதி நீக்க வழக்கில் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து யாரும் அப்பீல் செய்யவில்லை. அப்பீல் செய்ய கால அவகாசம் ஜனவரி 25-ந்தேதி வரை உள்ளது. இதனால் 18 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதனால் அந்த தொகுதியிலும் இடைத்தேர்தல் நடத்த முடியாத நிலை உள்ளது. இதனால் திருவாரூர் தொகுதி மட்டுமே தேர்தல் அறிவிப்புக்கு சாதகமாக இருந்தது.
ஆனால் தேர்தல் நடைபெறும் காலத்தில் புயல் அபாயம் இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டு இருந்ததால் இதனை காரணம் காட்டி தமிழக அரசு அளித்த அறிக்கையால் திருவாரூர் தேர்தல் அறிவிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஓ.பி. ராவத் ஓய்வு பெற்றதை அடுத்து கடந்த ஞாயிற்றுகிழமை சுனில் அரோரா புதிய தலைமை தேர்தல் கமிஷனராக பொறுப்பேற்றார். அவர் பதவி ஏற்றதும் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளின் நிலவரம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அறிக்கை கேட்டு இருந்தார். அவரும் விரிவான அறிக்கை ஒன்றை டெல்லி தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதில், திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பது குறித்தும் 18 தொகுதி உறுப்பினர்களின் தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து இதுவரை யாரும் அப்பீல் செய்யாதது குறித்தும் தகவல் தெரிவித்துள்ளார்.
தற்போது கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் இருந்தும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் புயல் பாதித்த மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தப் பணிகள் முடிந்த பின்புதான் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை ஏற்படும்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறுகையில், “18 தொகுதி காலியிடம் தொடர்பாக சட்டசபை செயலாளரிடம் விளக்கம் கேட்டு பெற்று டெல்லி தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து யாரும் அப்பீல் செய்யவில்லை. இதற்கான அவகாசம் ஜனவரி 25-ந்தேதி வரை உள்ளதால் அதுவரை பொறுத்து இருப்போம்” என்றார்.
இதற்கிடையே மதுரை ஐகோர்ட்டு கிளையில் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கில், பிப்ரவரி இறுதிக்குள் 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்திருந்தார். எனவே பிப்ரவரி இறுதியில் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் 5 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற 11-ந் தேதி முடிந்ததும் தெரிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. #ElectonCommission #TNElections
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு காரணமாக திருவாரூர் தொகுதியும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மறைவால் திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளது.
இதே போல் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சபாநாயகரின் நடவடிக்கை செல்லும் என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இதனால் தமிழகத்தில் 20 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. காலியான 6 மாதத்துக்குள் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது தேர்தல் கமிஷன் விதி.
இதனால் 5 மாநில சட்டசபை தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தகுதி நீக்க வழக்கில் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து யாரும் அப்பீல் செய்யவில்லை. அப்பீல் செய்ய கால அவகாசம் ஜனவரி 25-ந்தேதி வரை உள்ளது. இதனால் 18 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதனால் அந்த தொகுதியிலும் இடைத்தேர்தல் நடத்த முடியாத நிலை உள்ளது. இதனால் திருவாரூர் தொகுதி மட்டுமே தேர்தல் அறிவிப்புக்கு சாதகமாக இருந்தது.
ஆனால் தேர்தல் நடைபெறும் காலத்தில் புயல் அபாயம் இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டு இருந்ததால் இதனை காரணம் காட்டி தமிழக அரசு அளித்த அறிக்கையால் திருவாரூர் தேர்தல் அறிவிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டது.
20 தொகுதி இடைத்தேர்தல் குறித்து முன்பு இருந்த தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் கூறுகையில், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்படும் என்று தெரிவித்து இருந்தார். இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளின் நிலவரம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அறிக்கை கேட்டு இருந்தார். அவரும் விரிவான அறிக்கை ஒன்றை டெல்லி தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதில், திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பது குறித்தும் 18 தொகுதி உறுப்பினர்களின் தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து இதுவரை யாரும் அப்பீல் செய்யாதது குறித்தும் தகவல் தெரிவித்துள்ளார்.
தற்போது கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் இருந்தும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் புயல் பாதித்த மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தப் பணிகள் முடிந்த பின்புதான் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை ஏற்படும்.
அதன் பிறகே தமிழக அரசு தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அளிக்கும் அல்லது தேர்தல் நடத்தும் சூழ்நிலை உள்ளதா என்று தமிழக அரசிடம் தேர்தல் கமிஷன் அறிக்கை கேட்டு பெறும். அதன் அடிப்படையில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும்.
இதற்கிடையே மதுரை ஐகோர்ட்டு கிளையில் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கில், பிப்ரவரி இறுதிக்குள் 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்திருந்தார். எனவே பிப்ரவரி இறுதியில் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் 5 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற 11-ந் தேதி முடிந்ததும் தெரிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. #ElectonCommission #TNElections
காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளிலும் 80 சதவீத களப்பணியாளர்கள் தயாராக இருப்பதாக நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #HBDKamalHaasan
சென்னை:
நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 64-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதையொட்டி கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க கூடும் என்று நம்புகிறேன். அப்படி நடந்தால் நாங்கள் போட்டியிடுவோம். அதற்காக அந்த 20 தொகுதிகளிலும் 80 சதவீத களப்பணியாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.
சுகாதாரமான அரசியலுக்காகதான் நாங்கள் வந்து இருக்கிறோம். ஊழலற்ற சுகாதாரமான அரசியல் வந்தால் எல்லா துறைகளும் சீர்பட்டுவிடும் என்று நம்புகிறோம்.
தேர்தல்களை முறைகேடுகள் இல்லாமல் முறையாக நடத்துவதற்கான எல்லா பணிகளையும் எங்கள் கட்சி செய்து வருகிறது. நாங்கள் பயணிக்கும் இடங்களில் சந்திக்கும் மக்களிடம் அந்த நம்பிக்கை தெரிகிறது.
மக்களிடம் நான் வாக்குறுதி பெற்று வருகிறேன். இனி வாக்குக்கு பணம் வாங்க மாட்டோம் என்ற வாக்குறுதி தருகிறார்கள். அதை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன்.
ஆளவேண்டிய கட்சி மக்கள்தான். அவர்களுக்காக தான் நான் அரசியலுக்கே வந்துள்ளேன். அவர்கள் நன்றாக இருந்திருந்தால் நான் அரசியலுக்கே வந்திருக்க மாட்டேன்.
மக்கள் நல்ல தீர்ப்பை தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நம் நாட்டு அரசியலையே நாம் சரியாக செய்யவில்லை. பிற நாடுகளின் அரசியலில் நாம் தலையிட வேண்டியதில்லை. நான் யாருக்கும் குழலாகவோ ஊதுகுழலாகவோ இருக்கமாட்டேன்.
நாங்கள் மற்றவர்களை கடுமையாக விமர்சிக்கும் அரசியலை செய்ய வரவில்லை. நான் மக்களின் கருவி. எந்த கட்சிக்கும் கருவி கிடையாது. நாங்கள் பயணிக்க வேண்டிய தொலைவு வெகுதூரம் இருக்கிறது.
ஆனால் திட்டமிட்டதை விட வேகமாக பயணிக்கிறோம். அடுத்தகட்ட பயணம் இன்னும் 2 நாட்களில் தொடங்க இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #HBDKamalHaasan
நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 64-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதையொட்டி கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க கூடும் என்று நம்புகிறேன். அப்படி நடந்தால் நாங்கள் போட்டியிடுவோம். அதற்காக அந்த 20 தொகுதிகளிலும் 80 சதவீத களப்பணியாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.
சுகாதாரமான அரசியலுக்காகதான் நாங்கள் வந்து இருக்கிறோம். ஊழலற்ற சுகாதாரமான அரசியல் வந்தால் எல்லா துறைகளும் சீர்பட்டுவிடும் என்று நம்புகிறோம்.
தேர்தல்களை முறைகேடுகள் இல்லாமல் முறையாக நடத்துவதற்கான எல்லா பணிகளையும் எங்கள் கட்சி செய்து வருகிறது. நாங்கள் பயணிக்கும் இடங்களில் சந்திக்கும் மக்களிடம் அந்த நம்பிக்கை தெரிகிறது.
மக்களிடம் நான் வாக்குறுதி பெற்று வருகிறேன். இனி வாக்குக்கு பணம் வாங்க மாட்டோம் என்ற வாக்குறுதி தருகிறார்கள். அதை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன்.
ஆளவேண்டிய கட்சி மக்கள்தான். அவர்களுக்காக தான் நான் அரசியலுக்கே வந்துள்ளேன். அவர்கள் நன்றாக இருந்திருந்தால் நான் அரசியலுக்கே வந்திருக்க மாட்டேன்.
நாங்கள் மற்றவர்களை கடுமையாக விமர்சிக்கும் அரசியலை செய்ய வரவில்லை. நான் மக்களின் கருவி. எந்த கட்சிக்கும் கருவி கிடையாது. நாங்கள் பயணிக்க வேண்டிய தொலைவு வெகுதூரம் இருக்கிறது.
ஆனால் திட்டமிட்டதை விட வேகமாக பயணிக்கிறோம். அடுத்தகட்ட பயணம் இன்னும் 2 நாட்களில் தொடங்க இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #HBDKamalHaasan
விரைவில் நடைபெற உள்ள 20 தொகுதி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். #ADMK #Edappadipalaniswami #OPanneerselvam #KadambuRaju
சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
விரைவில் நடைபெற உள்ள 20 தொகுதி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
1. அரவக்குறிச்சி தொகுதி- தமிழ்மகன் உசேன் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்)
2. திருவாரூர் தொகுதி- ஜீவானந்தம் (முன்னாள் அமைச்சர்), ஆசைமணி (முன்னாள் எம்.எல்.ஏ.)
3. பாப்பிரெட்டிபட்டி- செ.ம.வேலுசாமி (கொள்கை பரப்பு துணை செயலாளர்), ப.மோகன் (அமைப்பு செயலாளர்)
4. திருப்போரூர்- நீலாங்கரை முனுசாமி (மீனவர் பிரிவு செயலாளர்), கமலக்கண்ணன் (அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர்)
மானாமதுரை தொகுதி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தொகுதி மாற்றப்பட்டு பெரம்பூர் தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளரான செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விளாத்திகுளம் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விளாத்திகுளம் தொகுதி தேர்தல் பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் எஸ். பி.சண்முகநாதன் ஒட்டப் பிடாரம் தொகுதிக்கு பொறுப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #Edappadipalaniswami #OPanneerselvam #KadamburRaju

20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கான வியூகம் அமைக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #ADMK #TNMinister #Jayakumar #TTVDhinakaran
சென்னை:
அ.தி.மு.க. அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நரகாசுரர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. வரம் கொடுத்த சிவன் தலையிலேயே கை வைத்தவர்கள் தான் நரகாசுரர்கள். அதைபோல் எந்த இயக்கம் அவர்களை (டி.டி.வி. தினகரன்) அடையாளம் காட்டியதோ? எந்த இயக்கத்தால் உண்டு, கொழுத்து வளர்ந்தார்களோ?. அவர்கள் தான் இந்த இயக்கத்தை (அ.தி.மு.க.) அழித்து விடலாம் என்று, செயல்பட்டு இன்றைக்கு அழிந்து போய் இருக்கிறார்கள். இந்த தீபாவளி எங்களுக்கு நல்ல தீபாவளி.
தமிழகத்தில் மருத்துவ அபாயம் ஏற்பட்டு இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். தி.மு.க. ஆட்சியில் தான் டெங்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது. ஆனால் இன்றைக்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருக்கிறோம்.
மு.க.ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது, ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 166 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். எங்கள் ஆட்சியில் 14 ஆயிரத்து 216 பேர் தான் பாதிக்கப்பட்டனர். தி.மு.க. ஆட்சியில் தான் நோய் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதை மறைத்து திரித்து மு.க.ஸ்டாலின் பேசுகிறார். இதேபோல் தி.மு.க. ஆட்சியில் வயிற்றுபோக்கு, காலரா போன்ற நோய்கள் பாதிப்பு இருந்தது.
எப்போது வேண்டுமானலும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம். எங்களை பொறுத்தவரையில் கட்டி முடிக்கப்பட்ட கோபுரங்களாக இருக்கிறோம். நாங்கள் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் தான் நிர்ணயிக்க வேண்டும்.
எங்களுக்கு டெபாசிட் கிடைக்காது என்று டி.டி.வி. தினகரன் கூறுவது என்பது, குப்புற விழுந்தும் கூட மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வது போல. எங்களை பொறுத்தவரையில் ஒற்றுமையுடன் எதிரிகளை தகர்த்து எறிந்து வெற்றியை பெறுவோம். வேட்பாளர்களை ஆட்சி மன்ற தேர்தல் குழு முடிவு செய்யும்.
20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வியூகம் அமைத்து இருக்கிறோம். அதை இப்போது சொல்ல முடியாது. டி.டி.வி. தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் அ.தி.மு.க.வுக்கு மீண்டும் திரும்பலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Jayakumar #TTVDhinakaran

தோல்வி பயத்தால் அ.தி.மு.க. அரசு 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்தாது என்று கம்பைநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார். #PMK #AnbumaniRamadoss #ADMK
கம்பைநல்லூர்:
பாட்டாளி மக்கள் கட்சியின் உழவர் பேரியக்கம் சார்பில், காவிரி உபரி நீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகளில் நிரப்ப வலியுறுத்தி, 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் கம்பைநல்லூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்த விளக்கப் பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
அ.தி.மு.க.வுக்கு தோல்வி பயம் அதிகம் உள்ளது. தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் உள்ளிட்ட காலியாக உள்ள 2 தொகுதிகளிலும், அ.தி.மு.க. அரசு இடைத்தேர்தலை நடத்தாது.
அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் கூட கிடைக்காது. மாநில அரசு மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதனால், தமிழகத்தில் இடைத்தேர்தலை நடத்த தமிழக அரசு முன்வராது.
காவிரி ஆற்றில் நிகழாண்டில் சுமார் 173 டி.எம்.சி. தண்ணீர் வீணாகி கடலில் கலந்துள்ளது. இந்த வீணாகும் நீரில், சுமார் 3 டி.எம்.சி. தண்ணீரை வழங்கினால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் நிரப்ப முடியும்.
தருமபுரி மாவட்டத்தில் தற்போது, நிலத்தடி நீர் மட்டம் 1,500 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. காவிரி உபரி நீரை நீர்நிலைகளில் நிரப்பினால் இந்த மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் 100 அடியில் இருக்கும். இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு ரூ.400 கோடி செலவாகும்.
எனவே, சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு காவிரி உபிரி நீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து நீர் நிலைகளிலும் நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த திட்டத்தை வலியுறுத்தி பா.ம.க. உழவர் பேரியக்கம் சார்பில், 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் பணிகள் நடைபெறுகிறது. இதில், 7.25 லட்சம் பேரிடம் தற்போது கையெழுத்து பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள கையெழுத்துகள் பொதுமக்களிடமிருந்து பெற்று, கோரிக்கை மனுக்களை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்க உள்ளோம்.
தமிழகத்தில் பா.ம.க. ஆட்சிக்கு வந்தால், தருமபுரி மாவட்டத்துக்கு என்று ரூ. 1000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, இந்த மாவட்ட மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, துணைப் பொதுச்செயலர் வெங்கடேஸ்வரன், உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி, கிழக்கு மாவட்ட செயலர் இமயவர்மன், உழவர் பேரியக்க மாவட்ட செயலர் அய்யப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். #PMK #AnbumaniRamadoss #ADMK

×

X