search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aaradhya bachchan"

    • பொது இடங்களில் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் தனியாக செல்வதால் இருவரும் பிரிந்து விட்டார்களா? என பேசப்பட்டு வந்தது.
    • அம்பானி வீட்டு திருமணத்திற்கு அபிஷேக் பச்சன் குடும்பமாகவும் ஐஸ்வர்யா ராய் மகளுடனும் பங்கேற்று இருந்தார்.

    பாலிவுட் பிரபலங்களான அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.

    அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராய் இருவரும் நடிப்பில் பிசியாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான "பொன்னியின் செல்வன்" திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் ஜஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.

    இந்த நிலையில் சமீப காலமாக பொது இடங்களில் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் தனியாக செல்வதால் இருவரும் பிரிந்து விட்டார்களா? என பேசப்பட்டு வந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் அம்பானி வீட்டு திருமணத்திற்கு அபிஷேக் பச்சன் குடும்பமாகவும் ஐஸ்வர்யா ராய் மகளுடனும் பங்கேற்று இருந்தார்.



    இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா பச்சனின் 13-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அதில் அபிஷேக் பச்சன் இல்லை.

    இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆராத்யா பச்சனை டீனேஜ் ஆக வரவேற்பதாக சொல்லி, மறைந்த தந்தை கிருஷ்ணராயின் புகைப்படத்தின் முன்பு தாய், மகளுடன் எடுத்த புகைப்படங்களை ஐஸ்வர்யா ராய் வெளியிட்டுள்ளார். அமிதாப் பச்சன் குடும்பத்தை சேர்ந்த யாரும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சன்.
    • இவர் ஐஸ்வர்யா ராயுடன் அடிக்கடி விருது நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார்.

    அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயின் மகளான ஆராத்யா பச்சன் (12). அடிக்கடி அம்மா ஐஸ்வர்யா ராயுடன் விருது விழாக்களுக்கும் சினிமா விழாக்களுக்கும் சென்று வருகிறார். சமீபத்தில் ஆராத்யாவின் உடல்நலம் சரியில்லை என்றும் அவருக்கு அரிய வகை நோய் உள்ளதாகவும் யூ டியூப் சேனல்கள் வதந்தியை பரப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து தவறான உள்நோக்கத்துடன் இப்படியொரு வதந்தியை பரப்பிய சுமார் 10 யூடியூப் சேனல்கள் மீது ஆராத்தியா பச்சன் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், அந்த வீடியோவை டெலிட் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் செய்த தவறுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும் என ஆராத்யா பச்சன் வழக்கறிஞர்களான ஆனந்த் மற்றும் நாயக் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    ஆராத்யா தான் மைனர் என்பதால் ஊடகங்களில் இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஆராத்யா பச்சனின் ஆட்சேபனைக்குரிய வீடியோக்களை வெளியிடுவதை இணையதளங்கள் நிறுத்த வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நீதிபதி சி. ஹரி சங்கர் கூறியதாவது:- பிரபலங்களின் குழந்தையாக இருந்தாலும் சரி, சாமானியரின் குழந்தையாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு குழந்தையும் மரியாதையுடன்நடத்தப்படுவதற்கு உரிமை உண்டு. குழந்தையின் மன மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து தவறான தகவல்களை பரப்புவது முற்றிலும் சகிக்க முடியாதது என கூறினார்.

    ×