search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Acharapaakkam"

    • இவர் இந்த தலத்து சிவபெருமான் மீது மிகுந்த பற்றுதல் கொண்டிருந்தார்.
    • திருவண்ணாமலை தலத்தில் நடத்தப்படுவது போன்று சொர்க்க வாசல் திறப்பு இங்கு நடக்கிறது.

    அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயம் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான ஆலயங்களில் ஒன்றாக திகழ்கிறது.

    இதற்கு வழிவகுத்தவர் இந்த பகுதியில் வாழ்ந்த பேணுகொண்டா தனபால் செட்டியார் என்பவர் ஆவார்.

    இவர் இந்த தலத்து சிவபெருமான் மீது மிகுந்த பற்றுதல் கொண்டிருந்தார்.

    தினமும் இந்த ஆலயத்துக்கு வந்து வழிபாடுகள் செய்வதை வழக்கத்தில் வைத்திருந்தார்.

    ஆட்சீஸ்வரர் ஆலயத்தில் குறிப்பிடத்தக்க சில திருப்பணிகளையும் இவர் செய்துள்ளார்.

    63 நாயன்மார்களுக்கும் செப்பு திருமேனிகளை இவர் உருவாக்கி கொடுத்துள்ளார்.

    இன்றும் அந்த 63 நாயன்மார்கள் சிலைகள் கண்கவரும் வகையில் பாதுகாப்புடன் ஆலயத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

    இவை தவிர மேலும் சில இறை திருமேனிகளை வடிவமைத்து உள்ளார்.

    மொத்தம் 104 பஞ்சலோக திருமேனிகளை இவர் செய்து கொடுத்துள்ளார்.

    இவை தவிர ஆட்சீஸ்வரர் ஆலயத்தின் தினசரி பூஜை மற்றும் திருப்பணிக்கென கடைவீதியில் ஒரு தெருவையே இவர் எழுதி வைத்துள்ளார்.

    அந்த அளவுக்கு ஆட்சீஸ்வரர் மீது இவர் பற்றுக்கொண்டு இருந்தார்.

    ஒரு நாள் இவரது கனவில் பெருமாள் தோன்றி தனது குறைகளை தெரிவித்தார்.

    "வைணவ குடும்பத்தில் பிறந்த நீ எனக்கும் தொண்டு செய்யாதது ஏன்?" என்று பெருமாள் கேட்டார்.

    அதன்பிறகே தனபால் செட்டியாருக்கு, பெருமாளுக்கும் சன்னதி உருவாக்க வேண்டும் என்ற யோசனை எழுந்தது.

    ஆனால் சிவாலயத்துக்குள் எப்படி பெருமாளுக்கு சன்னதி கட்ட முடியும் என்று திணறினார்.

    என்றாலும் ஆட்சீஸ்வரர் அருகில் பெருமாளை பிரதிஷ்டை செய்ய அவருக்கு அனுமதி கிடைத்தது.

    அதன்பேரில் உமையாட்சிஸ்வரர் சன்னதி அருகிலேயே சீனிவாச பெருமாளுக்கும் சன்னதி கட்டப்பட்டு உள்ளது.

    அருகில் அலமேல்மங்கை தாயாருக்கும் சன்னதி உள்ளது.

    பொதுவாக பெருமாள் ஆலயங்களில் தாமரை பீடத்தின் மீது பெருமாள் நின்று கொண்டிருக்கும் வகையில் சிலை அமைத்து இருப்பார்கள்.

    ஆனால் இந்த தலத்தில் சிவாலயத்துக்குள் பெருமாள் இருப்பதால் ஆவுடை மீது சீனிவாச பெருமாள் நின்று கொண்டிருப்பது போன்று வடிவமைத்து உள்ளனர்.

    சைவ, வைணவ ஒற்றுமைக்கு, அரியும், சிவனும் ஒன்று என்ற தத்துவத்துக்கு இந்த ஆலயம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

    பெருமாளும் இந்த ஆலயத்துக்குள் இருப்பதால் அவருக்குரிய பூஜைகளும் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

    புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் வைணவ தலங்களில் நடப்பது போன்று அனைத்து விதமான பூஜைகளும் இங்கு பெருமாளுக்கு நடத்தப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசி, ராபத்து, பகல் பத்து பூஜைகளும் இங்கு நடக்கின்றன.

    சொர்க்க வாசல் திறப்பும் இங்கு நடத்தப்படுகிறது.

    திருவண்ணாமலை தலத்தில் நடத்தப்படுவது போன்று சொர்க்க வாசல் திறப்பு இங்கு நடக்கிறது.

    மேலும் பெருமாளுக்கு உகந்த திருவோணம் நட்சத்திர நாட்களிலும், ஏகாதசி திதி நாட்களிலும் பெருமாள், தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    இந்த பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வழிபாடு செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது.

    ×