என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » afghan president
நீங்கள் தேடியது "Afghan president"
ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அதிபர் அஷரப் கானியின் பதவிக் காலத்தை நீட்டிக்க சுப்ரீம் கோர்ட் இன்று அனுமதி அளித்துள்ளது. #Afghanpresident #Afghansupremecourt #AshrafGhani #AshrafGhaniterm
காபுல்:
தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்த ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க பாதுகாப்புப்படைகள் வாபஸ் பெறப்பபட்ட மூன்றாண்டுகளுக்கு பின்னர் கடந்த 2014-ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் அதிபர் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக புகார்கள் எழுந்தன. நியாயமான வகையில் அடுத்த தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உள்ளூர் மக்களும் சர்வதேச அரசியல் நோக்கர்களும் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், புதிய வாக்களர்கள் கணக்கெடுப்பு மற்றும் பாதுகாப்பு நிலவரங்களை காரணம் காட்டி அடுத்தடுத்து தேர்தல் தேதி ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் தேர்தல் இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் 20-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டிய நிலையில் திடீரென்று ஜூலை 20-ம் தேதிக்கும் பின்னர் செப்டம்பர் 28-ம் தேதிக்கும் அடுத்தடுத்து தேர்தல் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தற்போதைய அதிபர் அஷ்ரப் கானியின் ஐந்தாண்டு பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைவதால் அதிபர் தேர்தல் நடந்து முடிந்து, புதிய அதிபர் பதவியேற்கும் வரை அதிபர் அஷரப் கானியின் பதவிக் காலத்தை நீட்டிக்க சுப்ரீம் கோர்ட் இன்று அனுமதி அளித்துள்ளது. #Afghanpresident #Afghansupremecourt #AshrafGhani #AshrafGhaniterm
காஷ்மீர் மாநிலத்தில் 40 வீரர்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர், இஸ்ரேல் பிரதமர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். #WhiteHouse #AfghanPresident #IsraelPM #PulwamaAttack
ஜெருசலேம்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தானில் இயங்கிவரும் ஜெய்ஷ்-இ-முஹம்மத் இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி நேற்று நடத்திய தற்கொலைப்படை தாக்குதலைத் தொடர்ந்து, மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கான முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது.
டெல்லியில் இன்று பிற்பகல் பாகிஸ்தான் தூதரை வரவழைத்து இந்திய உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது.
இதைதொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள இந்தியாவுக்கான தலைமை தூதரை உடனடியாக டெல்லி வருமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை கடுமையான வார்த்தைகளால் கண்டனம் தெரிவித்தது.
தெற்காசிய பகுதியில் பீதியையும், வன்முறைகளையும், குழப்பத்தையும் அதிகரிக்கச் செய்யும் பயங்கரவாத அமைப்புகளை ஆதரிக்கும் நடவடிக்கையையும், தங்களது மண்ணில் பாதுகாப்பான புகலிடம் அளிக்கும் செயலையும் பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும்.
புல்வாமா தாக்குதலை போன்ற கொடூரமான செயல்கள் வன்முறையை நசுக்கும் அமெரிக்கா-இந்தியா இடையிலான கூட்டு நடவடிக்கைக்கு சாதகமாக அமையும் என்பதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும் என வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் சாரா சான்டெர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உள்ளிட்டோரும் பாகிஸ்தான் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானால் தூண்டி விடப்படும் பயங்கரவாதம் தெற்காசிய பிராந்தியத்தில் புற்றுநோயாக மாறி வருவதாகவும், இந்த பயங்கரவாதிகளை அழிப்பதற்கு கூட்டு முயற்சிகள் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ள அஷ்ரப் கானி, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்தார்.
கொடூரமான இந்த தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் பலியான சம்பவத்துக்கு இஸ்ரேல் நாட்டு மக்களின் சார்பில் இரங்கல் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, துயரமான இந்த வேளையில் இந்திய மக்கள் மற்றும் பிரதமர் மோடியுடன் நாங்கள் இணைந்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார். #WhiteHouse #AfghanPresident #IsraelPM #PulwamaAttack
உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வரும் தலிபான்களுடன் நவம்பர் வரை 3 மாதகால போர் நிறுத்ததுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அழைப்பு விடுத்துள்ளார். #Afghanpresident #Afghanceasefire #Talibanceasefire
காபுல்:
இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே சுமார் 17 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
கடந்த ஜூன் மாதம் ரம்ஜான் முன்னிட்டு 5 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு ஒன்றை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அறிவித்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்டு தலிபான்களும் 3 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். அதன் பின்னர் சுமார் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்ட போர்நிறுத்ததை தலிபான்கள் மீறியதால் அவர்களுக்கு எதிரான தாக்குதல்களை அரசுப்படைகள் தீவிரப்படுத்தின.
நாட்டின் பல பகுதிகளை பிடித்து வைத்துள்ள தலிபான்கள் கஸ்னி நகரை கைப்பற்றுவதற்காக கடந்த 15 நாட்களாக ஆவேசமாக போரிட்டு வருகின்றனர். இந்த நகரம் அவர்கள் கையில் சிக்காமல் இருப்பதற்காக அரசுப் படையினரும் தீவிரமான எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
ஆப்கானிஸ்தான் அரசு தொலைக்காட்சியில் தோன்றி இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர், ‘மதத் தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்கள் இயக்க தலைவர்களுடன் ஆலோசித்த பின்னர் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது’ என தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் மக்கள் விருப்பத்தை தலிபான் தலைவர்கள் மதிப்பளித்து இந்த போர்நிறுத்தத்தை வரவேற்க வேண்டும். இஸ்லாமிய கொள்கைகளையொட்டி அமைதி பேச்சுவார்த்தைக்கு அவர்கள் தயராக இந்த போர்நிறுத்தம் வகை செய்யும் என நம்புகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தலிபான்களுக்கு ஆயுதங்களும், பதுங்குமிடமும் தந்து ஆதரித்து வருவதாக கூறப்படும் பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் சர்வதேச ராணுவமான நேட்டோ ஆகியவை இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. #Afghanpresident #Afghanceasefire #Talibanceasefire
இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே சுமார் 17 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
கடந்த ஜூன் மாதம் ரம்ஜான் முன்னிட்டு 5 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு ஒன்றை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அறிவித்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்டு தலிபான்களும் 3 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். அதன் பின்னர் சுமார் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்ட போர்நிறுத்ததை தலிபான்கள் மீறியதால் அவர்களுக்கு எதிரான தாக்குதல்களை அரசுப்படைகள் தீவிரப்படுத்தின.
நாட்டின் பல பகுதிகளை பிடித்து வைத்துள்ள தலிபான்கள் கஸ்னி நகரை கைப்பற்றுவதற்காக கடந்த 15 நாட்களாக ஆவேசமாக போரிட்டு வருகின்றனர். இந்த நகரம் அவர்கள் கையில் சிக்காமல் இருப்பதற்காக அரசுப் படையினரும் தீவிரமான எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இருதரப்பு மோதல்கள் கடந்த புதன்கிழமை முடிவுக்கு வந்துள்ள நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மீண்டும் ஒரு இடைக்கால போர்நிறுத்தத்துக்கு அதிபர் அஷ்ரப் கானி நேற்று அழைப்பு விடுத்துள்ளார். இன்றிலிருந்து (20-ம் தேதி) முஹம்மது நபியின் பிறந்தநாளான மீலாதுன்நபி விழா (நவம்பர் மாதம் 21-ம் தேதி) வரை இந்த போர்நிறுத்தம் அமலில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் மக்கள் விருப்பத்தை தலிபான் தலைவர்கள் மதிப்பளித்து இந்த போர்நிறுத்தத்தை வரவேற்க வேண்டும். இஸ்லாமிய கொள்கைகளையொட்டி அமைதி பேச்சுவார்த்தைக்கு அவர்கள் தயராக இந்த போர்நிறுத்தம் வகை செய்யும் என நம்புகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தலிபான்களுக்கு ஆயுதங்களும், பதுங்குமிடமும் தந்து ஆதரித்து வருவதாக கூறப்படும் பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் சர்வதேச ராணுவமான நேட்டோ ஆகியவை இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. #Afghanpresident #Afghanceasefire #Talibanceasefire
×

X