search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aging appearance"

    • வயது அதிகரிக்கும்போது இளமை தோற்றப் பொலிவு மங்கத் தொடங்கிவிடும்.
    • 40 வயதுக்கு பிறகும் இளமை தோற்றத்தை தக்கவைக்கலாம்.

    வயது அதிகரிக்கும்போது இளமை தோற்றப் பொலிவு மங்கத் தொடங்கிவிடும். சருமத்தில் சுருக்கங்களும் எட்டிப்பார்க்கும். வயது முதிர்ச்சிக்கு அடித்தளமிடும் இத்தகைய மாற்றம் சிலரிடத்தில் விரைவாகவே தென்படும். ஒருசில உணவுப்பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் 40 வயதுக்கு பிறகும் இளமை தோற்றத்தை தக்கவைக்கலாம். முன்கூட்டியோ, விரைவாகவோ முதுமை தோற்றம் எட்டிப்பார்ப்பதை தடுக்கலாம். அதற்கு வித்திடும் விஷயங்கள்...

     சிவப்பு குடைமிளகாய்

    உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் 'சூப்பர் புட்' உணவாக கருதப்படும் இது நம்பமுடியாத அளவுக்கு விரைவாக வயதாகும் தன்மையை தடுக்கக்கூடியது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அது கொலாஜன் உற்பத்திக்கு உதவக்கூடியது.

    மேலும் சரும நலனுக்கு நன்மை சேர்க்கும் கரோட்டினாய்டுகள் எனப்படும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகளை கொண்டுள்ளது. அவை சருமத்திற்கு கேடு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப்போராட உதவும். சூரியக்கதிர்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப்பொருட்களில் இருந்து பாதுகாக்கவும் செய்யும்.

    பப்பாளி

    உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய மற்றொரு பொருள், பப்பாளி. இது விரைவில் வயதாகும் தோற்றம் எட்டிப்பார்ப்பதை தடுக்கக்கூடியது. இந்த பழத்தில் வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் ஈ, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.

    இவை சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகின்றன. மேலும் இதிலுள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் சருமத்திற்கு கேடு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும். வயதான அறிகுறிகள் வெளிப்படுவதை தாமதப்படுத்தும்.

    ப்ளூபெர்ரி

    இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சூரிய ஒளி, மாசுபாடு மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவும் அந்தோசயனின் எனப்படும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகளும் அவற்றில் உள்ளன. மேலும் கொலாஜன் இழப்பைத் தடுத்து பொலிவான சருமத்தை தக்கவைக்கவும் உதவும்.

    புரோக்கோலி

    வைட்டமின் சி, கே, நார்ச்சத்து, போலேட், லுடீன், கால்சியம் உள்பட ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆன்டிஆக்சிடென்டுகளை கொண்ட காய்கறியாக புரோக்கோலி விளங்குகிறது. இதில் வைட்டமின் சி இருப்பதால் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. சருமத்திற்கு நெகிழ்ச்சித்தன்மையையும் அளிக்கிறது.


    அவகேடோ

    இந்த பழத்தில் வீக்கத்தை குறைக்கும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மென்மையான மற்றும் மிருதுவான சருமத்திற்கு வித்திடுகின்றன. மேலும் அவகேடோ பழத்தில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. அது இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. பளபளப்பான புள்ளிகளற்ற சரும அழகுக்கு அடிகோலுகிறது.

    ×