search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aircel Maxis cases"

    ஏர்செல் மேக்சிஸ் பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதித்திருந்த தடை மேலும் நீட்டிக்கப்பட்டது. #AircelMaxisCase #PChidambaram #KartiChidambaram
    புதுடெல்லி:

    ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தீவிரமடைந்த நிலையில், முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  

    இந்த மனுக்களை விசாரித்த சிபிஐ நீதிமன்ற தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி, இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்தார். அதன்பின்னர் வழக்கு விசாரணையின் தன்மைக்கு ஏற்ப, இந்த தடை உத்தரவு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    கடைசியாக இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை ஏப்ரல் 26-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்த தடை இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இவ்வழக்கு தொடர்பாக சிங்கப்பூரில் இருந்து கிடைக்க வேண்டிய தகவல் இன்னும் வந்து சேராததால் 4 வாரகால அவகாசம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்தார்.

    இதைதொடர்ந்து,  ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை மே 6-ம்  தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அன்றைய தினம் இவ்வழக்கின் மறுவிசாரணை நடைபெறவுள்ளது. #AircelMaxisCase #PChidambaram #KartiChidambaram  
    ஏர்செல் மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை ஏப்ரல் 26-ம் தேதி வரை சிபிஐ நீதிமன்றம் நீட்டித்துள்ளது. #AircelMaxisCase #PChidambaram #KartiChidambaram
    புதுடெல்லி:

    ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தீவிரமடைந்த நிலையில், முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


     
    இந்த மனுக்களை விசாரித்த சிபிஐ நீதிமன்ற தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி, இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்தார். அதன்பின்னர் வழக்கு விசாரணையின் தன்மைக்கு ஏற்ப, இந்த தடை உத்தரவு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    கடைசியாக இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை மார்ச் 25ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்த தடை இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை ஏப்ரல் 26-ம் தேதி தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #AircelMaxisCase #PChidambaram #KartiChidambaram
     
    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. #KartiChidambaram #AircelMaxisCase
    புதுடெல்லி:

    2006-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தார். இந்த காலகட்டத்தில், மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்தது. இதுகுறித்து சர்ச்சை எழுந்தது.

    பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவின் அனுமதி பெறாமல் இந்த முதலீடு செய்யப்பட்டதாகவும், இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியது என்று குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதன் அடிப்படையில் அமலாக்க துறையும், சி.பி.ஐ.யும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.



    இந்த வழக்கில் விசாரணை அமைப்புகளின் பிடி இறுகிய நிலையில், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்ய தடை விதித்தது. கடைசியாக நடந்த விசாரணையின்போது, ஆகஸ்டு 7-ந்தேதி வரை தடையை நீட்டித்து நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், முன்ஜாமீன் வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவருக்கும் முன்ஜாமீன் வழங்குவது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால், அக்டோபர் 8-ம் தேதி வரை ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடையை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #KartiChidambaram #AircelMaxisCase

    ×