என் மலர்
நீங்கள் தேடியது "Alliance talks"
- அ.தி.மு.க.வில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
- கூட்டணி பற்றி பேச்சு நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கட்சிகள் இடையே மீண்டும் கூட்டணி உருவாவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக பிரச்சனைகளுக்காக அமித் ஷாவை சந்தித்து மனு அளித்தார். அப்போது அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட் டணி தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை மத்திய மந்திரி அமித் ஷாவும் உறுதி செய்துள்ளார்.
அதே நேரத்தில் டெல்லி சென்ற அ.தி.மு.க. மூத்த தலைவரான செங்கோட்டையனும் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இதனால் அ.தி.மு.க.வில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை பணியவைப்பதற்காக பா.ஜ.க. செங்கோட்டையனை கையில் எடுத்திருப்பதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

அதே நேரத்தில் அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தை பெரிது படுத்தாமல் அமைதியாக இருக்குமாறு செங்கோட்டையனுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் அ.தி.மு.க.வில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனை சரி செய்யும் வகையில் வருகிற 6-ந்தேதி மதுரைக்கு வருகை தரும் பிரதமர் மோடியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை விமான நிலையத்தில் வைத்து பிரதமர் மோடியை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலவரம் கூட்டணி ஆகியவை பற்றி இருவரும் பேச்சு நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாராளுமன்றத் தேர்தலுக்காக தி.மு.க. அமைத்துள்ள கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து 10 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
அடுத்த கட்டமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் இன்று தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை 10.30 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன், மத்திய குழு உறுப்பினர் சம்பத் ஆகியோர் வந்தனர்.
இவர்களை தி.மு.க. தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது, திருப்பூர், கன்னியாகுமரி தொகுதிகளில் போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு விரும்புவதாக தெரிவித்தனர். இந்த தொகுதியை ஒதுக்க முடியாவிட்டால் மதுரை, கோவை தொகுதிகளை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தனர். இந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்ததும் வெளியே வந்த மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இன்று நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாகவும், மற்ற கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசிவிட்டு, தங்களுக்கு உரிய தொகுதிகளை திமுக தலைமை அறிவிக்கும் என்றும் கூறினார்.
இன்று பிற்பகல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவாலயம் வந்து கூட்டணி பேச்சு நடத்துகிறார். மாலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அறிவாலயம் வந்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவாலய நிர்வாகிகள் தெரிவித்தனர். #LSPolls #DMKAlliance






