என் மலர்
நீங்கள் தேடியது "Alopecia Areata"
- தலைமுடியை மென்மையாக சீவ வேண்டும்.
- உச்சி வெயிலில் நடப்பதை தவிர்க்க வேண்டும்.
புழுவெட்டு (அலோபேசியா) என்பது 'தன்னுடல் எதிர்ப்பு வகை நோய்' ஆகும். இது தலை அல்லது உடலின் எந்த பாகத்தையும் பாதிக்கலாம். குறிப்பாக ஆண்களுக்கு மீசை, தாடி பகுதிகளிலும் ஏற்படும்.

புழுவெட்டு என்பது முடிகள் முழுவதும் உதிர்ந்து வட்ட வடிவமான வழுக்கைத் திட்டுகள் தலை, தாடி, மீசை, புருவங்களில் ஏற்படுவது ஆகும். அந்த இடம் வழவழப்பாக இருக்கும். முடிகள் உதிர்வதற்கு முன் தோலில் அரிப்பு அல்லது வலி ஏற்பட்டு திடீரென முடி உதிர்தலை ஏற்படுத்தி வழுக்கையை உருவாக்குகிறது.
ஆனால் இது தற்காலிகமானது ஆகும். பூஞ்சைகளால் ஏற்படும் வழுக்கை திட்டுகளில், கடுமையான அரிப்பு, முடி உதிர்தல், உடைந்த முடி, வெண்நிற சிறு துகள்கள் உதிரல், அந்த இடம் சிவத்தல், வீக்கம் மற்றும் சில நேரங்களில் கசிவுடன் காணப்படும்.

தலைமுடி பாதுகாப்பு வழிமுறைகள்:
பரந்த பல் கொண்ட சீப்பு வைத்து தலைமுடியை மென்மையாக சீவ வேண்டும். தலைமுடி ஈரமாக இருக்கும் போது, துவட்டுவதற்கு மெல்லிய துண்டுகளை பயன்படுத்த வேண்டும். தலைமுடியைப் பாதுகாக்க உச்சி வெயிலில் நடப்பதை தவிர்க்க வேண்டும். புகைப்பிடிக்க கூடாது.

வயதாகும் போது தலை முடியின் வேர்கள் பலவீனம் அடைவது, நீரிழிவு மற்றும் லூபஸ் போன்ற சில உடல் பாதிப்புகள், மன அழுத்தம், குடும்ப பாரம்பரியத்தில் தாய்-தந்தை வகையில் வழுக்கை இருத்தல் போன்றவை முடி உதிர்வதற்கு காரணமாகிறது.
இது பொதுவாக வட்டவடிவமாக பூச்சி அரித்தது போல காணப்படுவதால் புழுவெட்டு எனப்படுகிறது ( உண்மையிலேயே புழுவிற்க்கும் புழு வெட்டிற்க்கும் எந்த தொடர்பும் இல்லை) பூஞ்சை நோய் தொற்றால் (Fungal Infection) ஏற்படும் படர்தாமரை நோயும் ( டீனியா கேப்பிடிஸ் - Tinea capitis) புழுவெட்டும் (Alopecia Areata) ஒன்றுபோல் தோன்றும் ஆனால் இவை இரண்டும் ஒன்றல்ல - அனுபவம் வாய்ந்த மருத்துவரால் இவற்றை வேறுபடுத்தி காண முடியும்.
புழுவெட்டு வகைகள் (Types of Alopecia Areata)
அலோபீசியா ஏரியேட்டா (Alopecia Areata) - திட்டு திட்டாக முடி உதிர்வது, ஆங்காங்கே, வட்ட வடிவமாக, முற்றிலும் முடி கொட்டிய நிலை இது
அலோபீசியா பார்சியாலிஸ் (Alopecia Partialis) - பாதி பகுதியாக முடி கொட்டுவது.
அலோபீசியா பார்பே (Alopecia Barbae) - தாடியிலோ மீசையிலோ ஏற்படும் புழு வெட்டு.
அலோபீசியா டோட்டாலிஸ் (Alopecia Totalis) - தலையிலோ, மீசையிலோ தாடியிலோ முழுவதுமாக முடி உதிர்ந்து போகுதல்.
அலோபீசியா ஒபியாசிஸ் (Alopecia Ophiasis) - தலையின் பின்புறமிருந்தோ, காதின் ஓரத்திலிருந்தோ முடி உதிர்தல்.
அலோபீசியா டிப்யூஸா (Alopecia Diffusa) - பரவலாக முடி உதிர்தல்.
அலோபீசியா யுனிவர்சாலிஸ் (Alopecia Universalis) - உடலின் எந்த ஒரு பகுதியிலும் முடி இல்லாமல் உதிர்ந்து போகுதல்.
இந்த நோய் வருவதற்கான காரணங்கள்
ஒவ்வாமை, கெட்டுப் போன அசைவ உணவுகள் உண்பது, குடல் கிருமிகள், பல் சொத்தை, மன இறுக்கம் என்ற டென்சன், இரத்தத்தில் போதுமான அளவு தேவையான சத்துகள் இன்மை, மார்பில் கழலை கட்டிகள், கருத்தடை மாத்திரைகளினால் ஏற்படும் பின் விளைவுகள் ,ஸ்டீராய்டு மாத்திரைகள் பயன்படுத்துவதனால் ஏற்படும் பின் விளைவுகள், சில வகை காய்ச்சல் சிபிலிஸ் கொனேரியா போன்ற பாலியல் நோய்கள் போன்ற ஏதாவது ஒன்றோ அல்லது பலவோ சேர்ந்து இருக்கலாம் இது தவிர சில காரணங்களும் உள்ளன
இந்த நோயாளிகளுக்கு முதலில் பேதிக்குக் கொடுத்து உடலையும் குடலையும் சுத்தப்படுத்த வேண்டும்.
முருக்கன் விதை மாத்திரைகள் சித்தா மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வந்து தனியாக் குடிநீருடன் (தனியா, பனை வெல்லம் சேர்த்துக் கொதிக்க வைத்த தீநீர் ) அதிகாலை சாப்பிட வேண்டும். அனைத்துக் கழிவுகளும் வெளியேறி விடும். பல் சொத்தை இருந்தால் அதை சரி செய்ய வேண்டும்
அறிகுறிகள்
* சிலருக்கு திட்டு திட்டாக முடி உதிர்ந்து வட்ட வடிவமாக காணப்படும்.
* சிலருக்கு சரி பாதி அளவு முடி உதிர்ந்து காணப்படும்.
* சிலருக்கு பரவலாக முடி உதிரும், ஆனால் வழுக்கையாக காணப்படாது.
* ஒருசிலருக்கு புழுவெட்டில் அரிப்புடன் கூடிய பொடுகும் காணப்படும் (Psoriatic Alopecia Areata).

கவனிக்க
* இது பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரை வேண்டுமானாலும் தாக்கலாம். ஆண்கள் பெண்கள் இருவரும் இந்த நோயினால் தாக்கப்படலாம்.
* சிலருக்கு சில தினங்களில் தானாக முடி வளர்ந்துவிடும். சிலருக்கு முறையான சிகிச்சை எடுத்தால் மட்டுமே முடி வளரும்.
* இந்த நோயானது உயிருக்கு எந்த தீங்கும் விளைவிக்காது.
* முறையான சிகிச்சையும் உளவியல் ஆலோசனையும் இவர்களுக்கு நன்கு பலனலிக்கும்.
சிகிச்சை முறைகள்
நவீன மருத்துவ முறையில் ஸ்டீராய்ட் மருந்துகளை மேற்பூச்சாகவும் மாத்திரைகளாவும் பரிந்துரைப்பார்கள் ஊசி மூலமாகவும் செலுத்துவார்கள். ஆனால் ஸ்டீராய்ட் உபயோகிப்பதனால் பல பக்க விளைவுகள் ஏற்படலாம்.
நாட்டு வைத்தியத்தில் நிறைய முறைகளை பரிந்துரைப்பார்கள். வெங்காயம், பூண்டு, துமட்டிக்காய் முதலியவற்றை மேற்பூச்சாக தடவ சொல்வார்கள், சிலருக்கு இது பலனலிக்களாம். இதன் மூலம் தலையில் புண் கூட ஆகலாம். இந்த முறைகள் அலோபீசியா ஏரியேட்டாவின் அடிப்படை காரணமான நோய் எதிர்ப்புதன்மையை அதிகப்படுத்தாது.
ஹோமியோபதி சிகிச்சை
ஹோமியோபதி மருந்துகள் மூலம் நோய் எதிர்ப்புதன்மை அதிகப்படுத்தப்படுவதால் ஹோமியோபதி சிகிச்சை அலோபீசியா ஏரியேட்டாவிற்க்கு சிறந்த பலனலிக்கும்.
மருந்து
வெள்ளைக் கரிசாலை சாறு, நல்ல எண்ணெய் இரண்டையும் சம அளவு கலந்து காய்ச்சி தைலமாக்கி புழு வெட்டு உள்ள இடங்களில் தடவி வர முப்பது முதல் நாற்பது நாட்களில் முடி வளருவதைக் கண்கூடாகக் காணலாம்
மருந்து இரண்டு
கார்போகி பொடி அவல் குஜாதிலேபம் இரண்டையும் நன்கு புளித்த கட்டித் தயிரில் அல்லது வினிகரில் அல்லது எலுமிச்சை சாற்றில் குழைத்து இரவில் தலையில் பூசி மறுநாள் காலையில் தலைக்கு சீகக்காய் கொண்டு குளித்து வர முடி வளரும்.
தினமும் காலை மாலை இள வெயில் தலையில் பட வேண்டும் ஆகவே வெயில் தலையில் படுமாறு வெயிலில் சிறிது நேரம் நிற்க வேண்டும்