search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aprilia Storm 125"

    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அப்ரிலியா ஸ்டாம் 125 ஸ்கூட்டரை பியாஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.



    அப்ரிலியா நிறுவனம் இந்தியாவில் ஸ்டாம் 125 ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் முன்னதாக 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அப்ரிலியா 125 ஸ்கூட்டர் விலை ரூ.65,000 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதன் உற்பத்தி மாடலுக்கும் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட மாடலுக்கும் தோற்றத்தில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. புதிய அப்ரிலியா ஸ்டாம் 125 ஸ்கூட்டரில் 10-இன்ச் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரேக்கிங்கிற்கு இருபுறமும் டிரம் பிரேக் மற்றும் சி.பி.எஸ். வசதி வழங்கப்பட்டுள்ளது.



    அப்ரிலியா ஸ்டாம் 125 மாடலில் முன்புறம் டிஸ்க் பிரேக் கொண்ட வேரியண்ட் அறிமுகமாவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. புதிய ஸ்டாம் 125 மாடலில் கிராப் ஹேண்டிள் மற்றும் வெள்ளை நிற அப்ரிலியா பேட்ஜ் கொண்டிருக்கிறது. புதிய ஸ்கூட்டரில் 124சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இதே என்ஜின் அப்ரிலியா எஸ்.ஆர். 125 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 9.4 பி.ஹெச்.பி. பவர் @7250 ஆர்.பி.எம். மற்றும் 9.8 என்.எம். டார்க் @6250 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. 

    இந்தியாவில் புதிய அப்ரிலியா ஸ்டாம் 125 மாடல் டி.வி.எஸ். என்டார்க் 125 டிரம் பிரேக் வேரியண்ட் (விலை ரூ.58,522), ஹோன்டா கிரேசியா டிரம் பிரேக் வேரியண்ட் (விலை ரூ.60,723) உள்ளிட்ட ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமைகிறது. 
    இத்தாலி நாட்டு இருசக்கர வாகன நிறுவனமான அப்ரிலியா தனது ஸ்டாம் 125 மாடலை விரைவில் இந்தியாவில் வெளியிட இருக்கிறது. புதிய மாடலின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    இத்தாலி நாட்டை சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான அப்ரிலியா தனது ஸ்டாம் 125 மாடலை 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்தது. புதிய மாடல் எஸ்.ஆர். 125 மாடலுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் ரூ.65,310 (எக்ஸ்-ஷோரூம், பூனே) என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    அப்ரிலியா ஸ்டாம் 125 இந்தியாவில் இந்த ஆண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய ஸ்கூட்டர் ஜனவரி 2019 வாக்கில் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் அப்ரிலியா நிறுவனம் சிபிஎஸ் (கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம்) வேரியன்ட்-ஐ மட்டுமே வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.

    முன்னதாக இந்தியாவில் சிபிஎஸ் இல்லாத வேரியன்ட்-ஐ அறிமுகம் செய்து அதன்பின் ஏப்ரல் 2019 வாக்கில் சிபிஎஸ் மாடலை அறிமுகம் செய்ய அப்ரிலியா திட்டமிட்டு இருந்தது. ஏப்ரல் 2019-க்கு பின் வெளியாகும் 125சிசி வாகனங்களில் சிபிஎஸ் வழங்கப்பட வேண்டும்.



    அப்ரிலியா புதிய விதிமுறை அமலாவதற்கு மூன்று மாதங்கள் முன்னதாகவே அப்ரிலியா ஸ்டாம் 125 மாடலை வெளியிட இருக்கிறது. சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் புதிய இருசக்கர வாகனத்தின் விலை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டமொத்தமாக ஸ்டாம் 125 வடிவமைப்பு பார்க்க எஸ்.ஆர். 125 போன்றே காட்சியளிக்கிறது.

    அப்ரிலியா ஸ்டாம் 125 மாடலில் 124சிசி, 3-வால்வ், சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 9.46 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 8.2 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. அப்ரிலியா எஸ்.ஆர். 125 மாடலில் சி.வி.டி. கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்போர்ட் ஸ்கூட்டரில் 6.5 லிட்டர் ஃபியூயல் டேன்க் வழங்கப்பட்டு இருக்கிறது. எஸ்.ஆர். 125 மாடலில் 7-லிட்டர் டேன்க் வழங்கப்பட்டுள்ளது.

    அப்ரிலியா ஸ்டாம் 125 மாடலின் முன்பக்கம் 30 மில்லிமீட்டர் டெலிஸ்கோபிக் போர்க்கள், பின்புறம் ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது. அப்ரிலியா ஸ்டாம் 125 மாடலில் பல்வேறு கூடுதல் உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
    ×