search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arms Trade Treaty"

    சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். #DonaldTrump #ArmsTradeTreaty
    வாஷிங்டன்:

    ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்து போட்டது.

    2013-ல் போடப்பட்ட இந்த ஒப்பந்தம், 2014-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 24-ந்தேதி அமலுக்கு வந்தது.

    இந்த ஒப்பந்தமானது, சர்வதேச அளவில் மரபு ரீதியிலான ஆயுத வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும். குறிப்பாக சிறிய ரக ஆயுதங்கள் தொடங்கி போர் விமானம் வரை இதன் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

    இந்த ஒப்பந்தம், டிரம்புக்கு பிடிக்கவில்லை. இதில் இருந்து அமெரிக்கா விலகுவது பற்றி அவர் பரிசீலித்து வந்தார்.

    இந்த நிலையில், இண்டியானாபொலிஸ் நகரில் நேற்று முன்தினம் நடந்த தேசிய துப்பாக்கி சங்கத்தின் ஆண்டு விழா கூட்டத்தில் டிரம்ப் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார்.

    இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் நாம் போட்ட கையெழுத்தை திரும்பப்பெறுகிறோம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ நோட்டீசை அமெரிக்காவிடம் இருந்து ஐ.நா. சபை பெற்றுக்கொள்ளும்” என்று கூறினார்.  #DonaldTrump #ArmsTradeTreaty 
    ×