என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » asia junior badminton
நீங்கள் தேடியது "Asia Junior Badminton"
ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென், ஜூனியர் உலக சாம்பியன் குன்லாட் விடிட்ஸ்ரனுக்கு (தாய்லாந்து) அதிர்ச்சி அளித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். #LakshyaSen
புதுடெல்லி:
ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) இந்தோனேஷியாவின் ஜகர்தா நகரில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென் 21-19, 21-18 என்ற நேர் செட் கணக்கில் ஜூனியர் உலக சாம்பியன் குன்லாட் விடிட்ஸ்ரனுக்கு (தாய்லாந்து) அதிர்ச்சி அளித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். கவுரவமிக்க இந்த போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே கவுதம் தாக்கர் (1965-ம் ஆண்டு), பி.வி.சிந்து (2012-ம் ஆண்டு) ஆகியோர் சாம்பியன் ஆகி இருக்கிறார்கள்.
உத்தரகாண்ட்டை சேர்ந்த 16 வயதான லக்ஷயா சென் கூறுகையில், ‘இந்த போட்டியில் நெருக்கடியின்றி எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி குன்லாட்டை வீழ்த்தினேன். தங்கப்பதக்கத்தை வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது நிச்சயம் எனது நம்பிக்கைக்கு ஊக்கமளிக்கும்’ என்றார்.

×

X