என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » assembly election 2018
நீங்கள் தேடியது "Assembly Election 2018"
பாரதிய ஜனதாவின் எதிர்மறை அரசியலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது என சோனியாகாந்தி தெரிவித்துள்ளார். #BJP #Congress #ElectionResult2018 #SoniaGandhi
புதுடெல்லி:
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம், தெலுங் கானா ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, மத்திய பிரதேசத்திலும் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அங்கு பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகள் ஆதரவளிக்க முன் வந்திருப்பதால் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது.
இந்தி பேசும் இந்த மாநிலங்களில் பா.ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றி இருப்பது மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தல் வெற்றி குறித்து சோனியாகாந்தி மகிழ்ச்சி அடைந்து உள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் கூறுகையில், ‘பா.ஜனதாவின் எதிர்மறை அரசியலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று உள்ளது. இந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி. இதற்காக உழைத்த கட்சியினருக்கும் பாராட்டுக்கள்’ என்று தெரிவித்தார். #BJP #Congress #AssemblyElection2018 #SoniaGandhi

சட்டசபை தேர்தல் நடைபெற்ற தெலுங்கானா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஓட்டு எண்ணும் பணி தொடங்கியது. #AssemblyElections #ElectionResults2018
தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
5 மாநிலங்களில் சேர்த்து மொத்தமாக 679 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு லட்சத்து 74 ஆயிரத்துக்கும் அதிகமாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஓட்டுப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்? என்பது இன்று பிற்பகலில் தெரிந்துவிடும்.
மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.
இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் முடிவு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. #AssemblyElections #ElectionResults2018
×

X