search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Association for Protection of Civil Rights"

    • குஜராத், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இஸ்ரலாமியளார்ளுக்கு எதிரான தாக்குதல் மற்றும் கொலை சம்பவங்களை அறிக்கையில் APCR மேற்கோள் காட்டியுள்ளது.
    • இஸ்லாமியர்கள் மீது கலெறிந்தது, கடைக்கு தீவைத்தது, மதராசாவில் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

    2024 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு இஸ்லாமிய சமூகத்தினரின் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக ட சமூக உரிமைகள் பாதுகாப்பு அமைப்பான [APCR] வெளியிட்டுள்ள அறிக்கையின் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆகியுள்ளார். இந்துத்துவ சித்தாந்தத்தை வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு நெருங்கிய தொடர்புடைய பாஜகவின் ஆட்சியில் சிறுபான்மையினர்களுக்கு குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பப்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த அறிக்கை மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

     

    டெல்லியை தலைமையிடமாக கொண்ட APCR வெளியிட்டுள்ள அறிக்கையில், '2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு நாட்டின் பல பகுதிகளில் வெவ்வேறு சமயங்களில் இஸ்லாமியர்கள் மீது தனிநபர் மற்றும் குழு தாக்குதல்கள் நடந்துள்ளன. மேலும் இஸ்லாமியர்களின் கட்டடங்கள் சட்டவிரோதமாக இடிக்கப்பட்டுள்ளன' என்று கூறப்பட்டுள்ளது. குஜராத், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இஸ்ரலாமியளார்ளுக்கு எதிரான தாக்குதல் மற்றும் கொலை சம்பவங்களை அறிக்கையில் APCR மேற்கோள் காட்டியுள்ளது.

    மேலும் தெலங்கானா, ஒடிசா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீது கலெறிந்தது, கடைக்கு தீவைத்தது, மதராசாவில் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. பசு வதை, மாட்டிறைச்சியை வைத்திருந்தது, மதம் தொடர்பான கொடிகளை நிறுவியது, பசு பலியிடப்படும் காட்சிகளை இணையத்தில் பகிர்ந்தது உள்ளிட்டவற்றை காரணங்காட்டி இந்த தாக்குதல்கள் நடத்துள்ளதகாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் மத்தியப் பிரேதசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் அரசு அதிகரிகளாலேயே இஸ்லாமியர்களின் கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேசம் மாண்டலா மற்றும் ரத்தலம் பகுதியில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இஸ்லாமியர்களின் வீடுகளை அரசு அதிகாரிகள் இடித்துள்ளனர் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

     

    மிகவும் தீவிரமான பிரச்சனையான இதுபோன்ற தாக்குதலைகளை தடுத்து இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளை APCR வலியுறுத்தியுள்ளது. 

    ×