search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Australian Cricket Team"

    ஆடுகளத்தில் மூர்க்கத்தனமாக செயல்படும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எதிராக அனுதாபம் என்ற பேச்சுக்கு இடமில்லை என மொயீன் அலி தெரிவித்துள்ளார். #MoeenAli
    இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மொயீன் அலி. இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா சென்று ஆஷஸ் தொடரில் விளையாடியபோது அந்த அணியில் இடம்பிடித்திருந்தார். அப்போது மொயீன் அலி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சொதப்பினார். இதனால் இந்தியாவிற்கு எதிரான முதல் மூன்று டெஸ்டிலும் அவர் இடம்பெறவில்லை.

    கவுன்ட்டி கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் சவுத்தாம்ப்டன் டெஸ்டில் களம் இறக்கப்பட்டார். இதில் சிறப்பாக பந்து வீசி இந்திய அணி தோல்வியடைய முக்கிய காரணமாக இருந்தார்.

    இவர் ஆஸ்திரேலியா சென்று விளையாடும்போது, அந்த அணி வீரர்கள் மிகவும் மோசமாக நடந்துள்ளனர். இதற்கிடையில் ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சில விமர்சித்தாலும் சிலர் இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்திருக்கக்கூடாது என்று அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மூர்க்கத்தானமாக செயல்படும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர்களுக்காக அனுதாபம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மொயீன் அலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மொயீன் அலி கூறுகையில் ‘‘நான் விளையாட விரும்பாத ஒரே அணி எது என்றால், அது ஆஸ்திரேலியாதான். அவர்கள் எங்களது பழைய எதிரிதான். என்றாலும், அவர்கள் வீரர்களுக்கும் மக்களுக்கும் மதிப்பு அளிப்பதில்லை.



    கடந்த 2015-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு முன் முதன்முதலாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நான் சிட்னியில் நடைபெற்ற ஆட்டத்தில் விளையாடும்போது, அவர்கள் எனக்கு எதிராக கடினமாக மட்டும் நடந்து கொள்ளவில்லை. என்னை இழிவுப்படுத்தினார்கள். அது என்னை முதன்முறையாக தாக்கியது. 2015 ஆஷஸ் தொடரிலும் மோசமாக நடந்து கொண்டார்கள்.

    தவறு செய்த மூன்று பேர் மீதும் சிலருக்கு அனுதாபம் ஏற்படலாம். ஆனால், அவர்களுக்காக வருத்தம் பட கடினமாக உள்ளது’’ என்றார்.
    ×