என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Australian Open Tennis"
- 2-வது கிராண்ட்சிலாம் பட்டத்துக்காக 25 வயதான ஷபலென்கா காத்திருக்கிறார்.
- 27 வயதான ஜெங் முதல்முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப்போட்டியில் ஆடுகிறார்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று பிற்பகலில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியனும், 2-வது வரிசையில் உள்ளவருமான சபலென்கா (பெலாராஸ்)-சீனாவை சேர்ந்த 12-ம் நிலை வீராங்கனையான ஜெங் மோதுகிறார்கள்.
சபலென்கா ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஒரு செட்டையும் இழக்காமல் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளார். 2-வது கிராண்ட்சிலாம் பட்டத்துக்காக 25 வயதான சபலென்கா காத்திருக்கிறார். கடந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனை வென்ற அவர் அமெரிக்க ஓபன் இறுதி ஆட்டத்திலும், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் அரை இறுதியிலும் தோற்று இருந்தார்.
சபலென்காவுக்கு எல்லா வகையிலும் ஜெங் ஈடு கொடுத்து விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. 27 வயதான அவர் முதல்முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப்போட்டியில் ஆடுகிறார்.
ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. இதில் 3-வது வரிசையில் இருக்கும் மெட்வதேவ் (ரஷியா-நான்காம் நிலை வீரான சின்னர் (இத்தாலி) மோதுகிறார்கள்.
மெட்வதேவ் 2-வது கிராண்ட்சிலாம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார். ஜோகோவிச்சை அதிர்ச்சிகரமாக வீழ்த்திய சின்னர் முதல் முறையாக கிராண்ட் சிலாம் இறுதிப்போட்டியில் விளையாடுகிறார்.
- 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரசின் சபலென்சா-உக்ரைனின் சுரென்கோ மோதினர்.
- மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் அனிசிமோலா வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரசின் சபலென்சா-உக்ரைனின் சுரென்கோ மோதினர்.
இதில் சபலென்கா 6-0, 6-0 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் அனிசிமோவா வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-ம் சுற்று ஆட்டத்தில் இத்தாலியின் சின்னர் 6-0, 6-1, 6-3 என்ற நேர்செட் கணக்கில் அர்ஜென்டினாவின் செபாஸ்டியன் பேசை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது வரிசையில் உள்ள ஜானிக்ஸ் ஷின்னர் (இத்தாலி) தொடக்க சுற்றில் நெதர்லாந்தை சேர்ந்த போடிக் வான்டேவை எதிர் கொண்டார்.
மெல்போர்ன்:
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது வரிசையில் உள்ள ஜானிக்ஸ் ஷின்னர் (இத்தாலி) தொடக்க சுற்றில் நெதர்லாந்தை சேர்ந்த போடிக் வான்டேவை எதிர் கொண்டார்.
இதில் ஷின்னர் 6-4, 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்ற முதல் சுற்று ஆட்டங்களில் மேட்டோ அர்னால்டி (இத்தாலி), ஜெவுமி முனார் (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த ஆட்டங்களில் 9-வது வரிசையில் உள்ள பார்பரா (செக் குடியரசு), லெசியா (உக்ரைன்) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
- மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.
- இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, ரிபாகினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ரிபாகினா 6-4 என வென்றார். இதையடுத்து சுதாரித்துக் கொன சபலென்கா அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.
- மக்டா லினெட் (போலந்து) 6-3, 7-5 என்ற கணக்கில் பிளிஸ்கோவாவை வீழ்த்தி முதல் முறையாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.
- ஷபலென்கா 6-3, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 5-வது வரிசையில் உள்ள அர்யனா ஷபலென்கா (பெலாரஸ்)-டோனா வெகிச் (குரோஷியா) மோதினார்கள்.
இதில் ஷபலென்கா 6-3, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 49 நிமிட நேரம் தேவைப்பட்டது.
24 வயதான ஷபலென்கா முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறார். இதற்கு முன்பு 4-வது சுற்று வரை தகுதி பெற்று இருந்தார். ஒட்டு மொத்த கிராண்ட்சிலாம் போட்டிகளில் 4-வது முறையாக அரை இறுதியில் விளையாடுகிறார். விம்பிள்டனில் 2021 ஆண்டும், அமெரிக்க ஓபனில் 2021, 2022-ம் ஆண்டும் அவர் அரை இறுதிக்கு தகுதி பெற்று இருந்தார்.
மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 30-வது வரிசையில் உள்ள கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) அதிர்ச்சிகரமாக தோற்றார். அவர் 7-வது முறையாக கிராண்ட்சிலாம் கால் இறுதியில் தோற்றுள்ளார்.
45-வது வரிசையில் இருக்கும் மக்டா லினெட் (போலந்து) 6-3, 7-5 என்ற கணக்கில் பிளிஸ்கோவாவை வீழ்த்தி முதல் முறையாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.
அவர் அரை இறுதியில் ஷபலென்காவை சந்திக்கிறார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
- காலிறுதியில் ஆடவிருந்த ஜெலேனா ஒஸ்டாபென்கோ-டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடி வாக் ஓவர் கொடுத்து வெளியேறியது.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் இந்தியா சார்பில் கலப்பு இரட்டை பிரிவில் முன்னணி வீராங்கனை சானியா மிர்சாவும், ரோகன் போபண்ணாவும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
2-வது சுற்று ஆட்டத்தில் அரியெல் பெஹர்(உருகுவே)-மகோட்டோ நினொமியா(ஜப்பான்) ஜோடியுடன் மோதிய சானியா-ரோகன் போபண்ணா ஜோடி 6-4, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.
இந்நிலையில், காலிறுதியில் விளையாட இருந்த ஜெலேனா ஒஸ்டாபென்கோ-டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடி வாக் ஓவர் கொடுத்து வெளியேறியதால் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதிக்குள் நுழைந்தது.
- மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.
- இதில் லாத்வியா வீராங்கனையை வீழ்த்தி ரிபாகினா அரையிறுதிக்கு முன்னேறினார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, லாத்வியாவின் ஜெலேனா ஒஸ்டாபென்கோவுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ஒஸ்டாபென்கோவை வீழ்த்தி எலினா ரிபாகினா அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் பெலாரசின் விக்டோரியா அசரன்கா, அமெரிக்காவின் ஜெசிக்கா பெகுலாவுடன் மோதினார். இதில் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் அசரன்கா வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- 4-வது வரிசையில் இருக்கும் கரோலின் கார்சியா (பிரான்ஸ்) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.
- 24 வயதான ஷபலென்கா முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் கால் இறுதிக்கு நுழைந்து உள்ளார்.
மெலபோர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
உலக தர வரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் அரினா ஷபலென்கா (பெலாரஸ்) இன்று காலை நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் பெலின்டா பென்சிக்கை (சுவிட்சர்லாந்து) எதிர் கொண்டார்.
இதில் ஷபலென்கா 7-5, 6-2, என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 27 நிமிட நேரம் தேவைப்பட்டது.
24 வயதான ஷபலென்கா முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் கால் இறுதிக்கு நுழைந்து உள்ளார். இதற்கு முன்பு கடந்த ஆண்டும், 2021-ம் ஆண்டும் 4-வது சுற்று வரை வந்ததே சிறந்த நிலையாக இருந்தது. ஷபலென்கா கால் இறுதியில் குரோஷியாவை சேர்ந்த டோனாவை சந்திக்கிறார்.
64-வது வரிசையில் உள்ள டோனா 4-வது சுற்று ஆட்டத்தில் செக்குடியரசுவை சேர்ந்த லின்டாவை 6-2, 1-6, 6-3 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
30-வது வரிசையில் உள்ள கரோலினா பினிஸ்கோவா (செக்குடியரசு) 4-வது சுற்று ஆட்டத்தில் சீனாவை சேர்ந்த சூயி ஷாங்கை எதிர் கொண்டார். இதில் பிளிஸ்கோவா 6-0, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.
அவர் கால் இறுதியில் போலந்தை மக்டா லினிட்ன சந்திக்கிறார்.
4-வது வரிசையில் இருக்கும் கரோலின் கார்சியா (பிரான்ஸ்) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். மக்டா லினிட் 7-6 (7-3), 6-4 என்ற கணக்கில் கார்சியாவை வீழ்த்தினார். லினிட் முதல் தடவையாக கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மற்ற கால் இறுதி ஆட்டங்களில் ரைபகினா (ரஷியா)-ஆஸ்டா பென்கோ (லாத்வியி), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா)-விக்டோரியா அசரென்கா (பெலராஸ்) மோதுகிறார்கள்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கரண் கச்னோவ் (ரஷியா), செபஸ்டியன் கோர்டா (அமெரிக்கா), சிட்சிபாஸ் (கிரீஸ்), ஜிலி லபேகா (செக்குடியரசு) ஆகியோர் கால் இறுதிகு தகுதி பெற்றுள்ளனர்.
- இன்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இகா ஸ்வியாடெக், எலெனாவுடன் மோதினார்.
- இதில் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. காலிறுதிக்கு முந்தைய சுற்றுகள் இன்று நடைபெற்றது.
இதில் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரிபாகினாவுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் எலெனா ரிபாகினா 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் இகாவை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
- செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் 4ம் சுற்றுக்கு முன்னேறினார்
- மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று போட்டியில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச், பல்கேரியா நாட்டை சேர்ந்த கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 7-6 ,6-3, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
டை பிரேக்கர் வரை நீடித்த முதல் செட்டை ஜோகோவிச் கைப்பற்றியபோது, காயம் காரணமாக அவதிப்பட்டார். தொடை தசைநாரில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை வழங்கப்பட்டது. இவ்வாறு இரண்டு முறை சிகிச்சை பெற்ற நிலையிலும், அடுத்தடுத்த 2 செட்களையும் வசமாக்கி வெற்றி பெற்றுள்ளார் ஜோகோவிச். இதனால் அவர் 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது. இவர்கள், ஆஸ்திரேலியாவின் ஜெய்மீ போர்லிஸ்- லூக் சேவில்லே ஜோடியை 7-5, 6-3 என்ற நேர்செட்களில் வீழ்த்தி, 2ம் சுற்றுக்கு முன்னேறினர். இதேபோல மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.
ஸ்ரீராம் பாலாஜி-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, 7-6 (6), 2-6, 6-4 என்ற செட் கணக்கில் 5ம் தரநிலை ஜோடியான இவான் டோடிக் மற்றும் ஆஸ்டின் கிராஜிசெக் ஜோடியைத் தோற்கடித்தது.
ஜூனியர் பிரிவில், இந்தியாவின் இளம் வீரர் மனாஸ் தாம்னே (வயது 15), ஆஸ்திரேலியாவின் ஜெர்மி ஜாங்கை 6-3, 6-3 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
- பிளிஸ் கோவா 6-4, 6-2 என்ற கணக்கில் எளிதில் வென்றார்.
- இன்னொரு ஆட்டத்தில் டோனா வெகிக் (குரோஷியா) 6-2, 6-2 என்ற கணக்கில் நூரியாவை (ஸ்பெயின்), வீழ்த்தினார்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 5-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), டேனியல் இவான்சை (இங்கிலாந்து) எதிர் கொண்டார்.
இதில் ரூப்லெவ் 6-4, 6-2, 6-3, என் நேர் செட் கணக்கில் 25-வது வரிசையில் உள்ள இவான்சை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 30-வது வரிசையில் உள்ள கரோலினா பிளிஸ் கோவா (செக்குடியரசு), 3-வது சுற்றில் கிராச் ஹெர்வாவை (ரஷியா), எதிர் கொண்டார். இதில் பிளிஸ் கோவா 6-4, 6-2 என்ற கணக்கில் எளிதில் வென்றார்.
இன்னொரு ஆட்டத்தில் டோனா வெகிக் (குரோஷியா) 6-2, 6-2 என்ற கணக்கில் நூரியாவை (ஸ்பெயின்), வீழ்த்தினார்.
- சானியா மிர்சா அடுத்த மாதத்துடன் சர்வதேச டென்னிசில் இருந்து விடைபெறுகிறார்.
- அவர் விளையாடும் கடைசி கிராண்ட்சிலாம் போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, அன்னா டேனிலினா (கஜகஸ்தான்) ஜோடி, டால்மா கால்பி (ஹங்கேரி)- பெர்னடா பெரா (அமெரிக்கா) இணையுடன் மோதியது.
இதில் சானியா ஜோடி 6-2, 7-5 என்ற நேர் செட்டில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
சானியா ஜோடி அடுத்து அன்ஹெலினா கலினினா (உக்ரைன்)- அலிசன் வான் உட்வானிக் (பெல்ஜியம்) இணையை எதிர்த்து விளையாட உள்ளது.
36 வயதான சானியா மிர்சா அடுத்த மாதத்துடன் சர்வதேச டென்னிசில் இருந்து விடைபெறுகிறார். அவர் விளையாடும் கடைசி கிராண்ட்சிலாம் போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்