என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » avengers limited edition
நீங்கள் தேடியது "Avengers Limited Edition"
ஒப்போ நிறுவனம் தனது எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனின் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷனை அறிமுகம் செய்தது. #OPPO
ஒப்போ நிறுவனம் எஃப்11 ப்ரோ மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை மலேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் புளு நிறத்தில் கிளாஸி ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கிரேடியன்ட் எஃபெக்ட்கள் மற்றும் அவெஞ்சர்ஸ் லோகோ உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.
ஸ்மார்ட்போனின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கேப்டன் அமெரிக்காவை தழுவிய கேஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது. இந்த கேஸ் கேப்டன் அமெரிக்காவின் ஷீல்டு போன்ற உருவம் கொண்டிருக்கிறது. இதனை போனின் ஹோல்டர் போன்று பயன்படுத்திக் கொள்ளலாம்.
இத்துடன் மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் பெட்டியில் அவெஞ்சர்ஸ் சின்னம், ஸ்டேம்ப்டு பேட்ஜ் மற்றும் சிறப்பு பரிசு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ எஃப்11 ப்ரோ மாடலில் 6.5 இன்ச் FHD+ பானரோமிக் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0, இயங்குதளம், 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ஒப்போ எஃப்11 ப்ரோ மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் 128 ஜி.பி. மாடல் விலை 1399 மலேசியன் ரிங்கிட் (இந்திய மதிப்பில் ரூ.23,665) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒப்போ நிறுவனத்தின் எஃப்11 ப்ரோ அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #OPPO
ஒப்போ நிறுவனம் தனது எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. தற்சமயம் ஒப்போ தனது எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனின் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை ஏப்ரல் 24 ஆம் தேதி மலேசியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனில் புளு மற்றும் ரெட் நிற அவெஞ்சர்ஸ் லோகோ இடம்பெற்றிருக்கிறது. இதில் 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்டான்டர்டு எடிஷனில் 64 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டிருக்கிறது. புதிய அவெஞ்ர்ஸ் லோகோ தவிர புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
அந்த வகையில் ஒப்போ எஃப் 11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD பிளஸ் பானாரோமிக் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0 வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, அல்ட்ரா நைட் மோட், டேசிள் கலர் மோட் மற்றும் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. என்ஜின், அல்ட்ரா-க்ளியர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 3D கிரேடியன்ட் பேக், தண்டர் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. புதிய ஒப்போ எஃப் 11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹச். பேட்டரி மற்றும் VOOC ஃபிளாஷ் சார்ஜ் 3.0 வழங்கப்பட்டுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X