search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayodhya land case"

    அயோத்தி பிரச்சனையை சுமுகமாக தீர்க்க நடுநிலையாளர்களை நியமிக்கலாமா? என்பது குறித்து மார்ச் 5ம் தேதி உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. #AyodhyaCase #SC
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மனுதாரர்கள் சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் பிரித்துக்கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால் இதை எதிர்த்து 3 பிரிவினரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மொத்தம் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்தது. பின்னர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

    இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் துவங்கியது.



    அப்போது, அயோத்தி விவகாரத்தை நிலப்பிரச்சனையாக பார்க்கவில்லை, மத நம்பிக்கை சார்ந்த விஷயமாக பார்க்கிறோம் எனவும் இரண்டு மதங்கள் இடையே உள்ள பிரச்சனையை சுமுகமாக தீர்க்கவே முயற்சிக்கிறோம் என நீதிபதிகள் கூறினர். மேலும், அயோத்தி பிரச்சனையை சுமூகமாக தீர்க்க நடுநிலையாளரை நியமிக்கலாம் என்று யோசனை தெரிவித்த நீதிபதிகள், நடுநிலையாளரை நியமிக்கலாமா? என்பது குறித்து மார்ச் 5-ல் உத்தரவு பிறப்பிப்பதாகவும் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

    மேலும், 6 வார காலத்திற்குள் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மொழிமாற்றம் செய்து வழங்க வேண்டும் என்று பதிவாளரை கேட்டுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் முக்கிய விஷயம் எட்டு வாரங்களுக்கு பிறகு விசாரிக்கப்படும் என தெரிவித்தனர். அதேபோல், மனுதாரர்கள் எட்டு வாரத்திற்குள் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, ஆட்சேபம் இருந்தால் தெரிவித்துவிட வேண்டும் எனவும் கூறினர்.

    இவ்வழக்கில் நடுநிலையாளரை நியமிக்கும் யோசனையை சில முஸ்லிம் அமைப்புகள் ஏற்றுக்கொண்டன. ராம் லல்லா போன்ற சில இந்து அமைப்புகள் ஆட்சேபனை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. #AyodhyaCase #SC
    அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை அரசியல் சாசன அமர்வு வரும் 26-ம் தேதி முதல் விசாரணை நடத்த உள்ளது. #AyodhyaCase #SupremeCourt
    புதுடெல்லி:

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. ஆனால் அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதிகள் யு.யு.லலித், என்.வி.ரமணா ஆகியோர் அடுத்தடுத்து விலகினர். மற்றொரு நீதிபதி எ.ஏ.பாப்டே விடுப்பில் சென்றார். இதுபோன்ற காரணங்களால் வழக்கு விசாரணை தாமதம் ஆனது.

    அதன்பின்னர் புதிய அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வில் தலைமை நீதிபதியுடன், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.



    இந்நிலையில், விடுப்பில் சென்றிருந்த நீதிபதி பாப்டே பணிக்குத் திரும்பியதையடுத்து, அயோத்தி வழக்கு வரும் 26-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான புதிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது. #AyodhyaCase #SupremeCourt 
    அயோத்தியில் பிரச்சனைக்குரிய இடத்தை சுற்றி, வாங்கப்பட்ட 67 ஏக்கர் நிலத்தை உண்மையான உரிமையாளர்களிடம் திருப்பி அளிக்க அனுமதிக்கும்படி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. #SC #AyodhyaCase #AyodhyaDisputeSite
    புதுடெல்லி:

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடமான 2.77 ஏக்கர் நிலப்பகுதியைச் சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தை உரிமையாளர்களிடம் இருந்து மத்திய அரசு கடந்த 1991-ம் ஆண்டு வாங்கியது. அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தைச் சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அஹாரா, ராம் லாலா ஆகிய 3 குழுக்கள் சமமாக பிரித்துக்கொள்ள உத்தரவிட்டது. ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து 14 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  

    இந்த வழக்கு விசாரணை அரசியல் சாசன அமர்வில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசியலமைப்பு அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி பாப்தே வராததால் விசாரணை ரத்து செய்யப்பட்டது. எப்போது விசாரணை நடைபெறும் என்ற தகவலும் வெளியிடப்படவில்லை.

    இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு புதிதாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், “கடந்த 1991-ம் ஆண்டு, அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலப்பகுதியைச் சுற்றி 67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு வாங்கி இருந்தது. அந்த நிலப்பகுதியை உண்மையான உரிமையாளர்களிடமே திருப்பி அளிக்க அனுமதிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

    மத்திய அரசின் இந்த முடிவை விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பு வரவேற்றுள்ளது. இது குறித்து விஎச்பி அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் கூறுகையில், "அயோத்தியில் அரசு வாங்கியுள்ள 67 ஏக்கர் நிலம் ராம் ஜென்மபூமி நயாஸ்க்கு உரிமையானது. அதில் எந்தவிதமான சட்டச்சிக்கலும் இல்லை. அதைத் திரும்ப ஒப்படைக்க அரசு முடிவு செய்திருப்பது சரியான நடவடிக்கை. அதனை நாங்கள் வரவேற்கிறோம்" எனத் தெரிவித்தார்.

    சர்ச்சைக்குரிய நிலத்தை தவிர, அதைச் சுற்றி உள்ள நிலத்தை விடுவிக்கப்பட்டால், அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SC #AyodhyaCase #AyodhyaDisputeSite
    அயோத்தியில் ராமர் கோயில் அமைவதை எதிர்க்கட்சிகளால்கூட வெளிப்படையாக தடுக்க முடியாது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். #Ramtemple #MohanBhagwat
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம், அரித்துவார் நகரில் யோகா குரு பாபா ராம்தேவ் நடத்திவரும் பதாஞ்சலி பீடத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார்.

    அயோத்தியில் ராமர் கோயில் அமைவதை எதிர்க்கட்சிகளால்கூட வெளிப்படையாக தடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

    அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. ஆனால், இதற்கு உகந்த காலம் கைகூட சிறிது நேரம் ஆகலாம். எல்லா அரசாங்கங்களுக்கும் சில வரம்பு எல்லைகள் உள்ளன. அந்த வரம்புக்குள்தான் அவர்கள் செயல்பட முடியும்.

    ஆனால், சாதுக்களுக்கும் ஜீயர்களுக்கும் அத்தகைய கட்டுப்பாடுகள் கிடையாது. மதம், நாடு மற்றும் சமூகத்தின் உயர்வுக்காக அவர்கள் பாடுபட வேண்டும்.

    ராமபிரான் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தெய்வம் என்பதால் அயோத்தியில் ராமர் கோயில் அமைவதை  எதிர்க்கட்சிகளால்கூட வெளிப்படையாக தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். #Ramtemple #MohanBhagwat
    ×