என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Banana Recipe"
- வாழைப்பழம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது.
- வாழைப்பழத்தில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
வாழைப்பழம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது. ஏனெனில், அதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும் அவை ஆற்றலின் களஞ்சியமாகும். எனவே, நாம் தினமும் வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். ஒருவேளை உங்களுக்கு வாழைப்பழம் சாப்பிட பிடிக்கவில்லை என்றால், வாழைப்பழம் அல்வா செய்து சாப்பிடுங்கள்.
பொதுவாகவே, கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா போன்றவற்றை தான் வீடுகளில் செய்வார்கள். ஆனால் வாழைப்பழ அல்வாவை ருசித்தவர்கள் வெகு சிலரே. நீங்கள் இனிப்புகளை சாப்பிட விரும்புபவர்கள் என்றால் வாழைப்பழத்தில் செய்யப்படும் அல்வாவை கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள். வாழைப்பழம் அல்வா செய்யும் முறையை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் - 5
சர்க்கரை - 1/4 கப்
நெய் - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
தண்ணீர் - 1/4 கப்
முந்திரி, உலர் திராட்சை - தேவையான அளவு
செய்முறை:
வாழைப்பழம் அல்வா செய்ய முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். இப்போது அந்த துண்டுகளை மசிக்க வேண்டும் அல்லது மிக்சி ஜாரில் அரைக்க வேண்டும். அதே நேரத்தில், அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நெய் சேர்த்து சூடாக்க வேண்டும். நெய் சூடானதும் அதில் முந்திரி உலர் திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அதே பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரை பாகு நிலைக்கு வந்தவுடன் அதனுடன் அதில் அரைத்து வைத்த வாழைப்பழத்தை சேர்க்க வேண்டும். இதனுடன் சிறிதளவு நெய்யும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இவற்றை நன்கு வதக்கிக் கொண்டே இருக்க வேண்டும். வாழைப்பழம் நன்கு வெந்தவுடன் நிறம் மாறும். கடைசியாக ஏலக்காய் தூள் வருத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து கிளர வேண்டும். அவ்வளவுதான் இப்போது சுவையான வாழைப்பழ அல்வா ரெடி.
- அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஹெல்த்தியான கொரின் டிஷ்.
- 5 நிமிடத்தில் ஈஸியா செய்து சாப்பிடலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய ஹெல்த்தியான கொரின் ஸ்பெஷல் பனானா ஃபிரை 5 நிமிடத்தில் ஈஸியா செய்து சாப்பிடலாம். பொதுவாக மாலை நேரங்களில் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று அனைவருக்கும் தோன்றும். வாழைப்பழத்தில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் பி 6, வைட்டமின் சி, கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது. எனவே ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வித்தியாசமான பனானா ஃபிரை செய்து சுவைத்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
கார்ன்பிளார்- 3 ஸ்பூன்
சோடா உப்பு- கால் டீஸ்பூன்
முட்டை- 2
பால்- 50 மில்லி
பிரெட் தூள்- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாழைப்பழங்களை இரண்டாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வாழைப்பழ துண்டுகளில் ஐஸ் கிரீம் குச்சிகளை சொருகி லாலிபாப் போன்று வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பவுலில் கார்ன்பிளார் மாவு, சோடா உப்பு மற்றும் முட்டையை அதில் உடைத்து ஊற்றி நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். இதில் பால் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்துகொள்ள வேண்டும்.
இப்போது வாழைப்பழங்களை இந்த கார்ன்பிளார் மாவுக் கலவையில் தோய்த்து, பின்னர் பிரெட் தூள்களில் புரட்டி எடுத்து ஒரு பிளேட்டில் வரிசையாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வாழைப்பழ துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான கொரியன் ஸ்பெஷல் பனானா ஃபிரை தயார். இதனை தேனுடன் தொட்டுக்கொள்ள சுவை இன்னும் அற்புதமாக இருக்கும். நீங்களும் உங்களது வீடுகளில் செய்து சுவைத்துப் பாருங்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்