search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bengaluru Rains"

    • நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெளியேறாமல், தேங்கியுள்ளது.
    • வெள்ள நீரில் மக்கள் மீன்பிடித்து சென்ற சம்பவம் அரங்கேறியது.

    பெங்களூருவில் இன்று (அக்டோபர் 22) கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெளியேறாமல், தேங்கியுள்ளது.

    மழைநீர் தேங்கியதை அடுத்து பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்புப்படையினர் படகுகள் மூலம் மீட்டனர். தொடர் கனமழையில் சிக்கித் தவிக்கும் பெங்களூரு நகரின் சில பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில், கனமழையால் சூழ்ந்த வெள்ள நீரில் மக்கள் மீன்பிடித்து சென்ற சம்பவம் அரங்கேறியது. பெங்களூருவை அடுத்த அல்லலசண்ட்ரா மற்றும் எலஹங்கா பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரில் மக்கள் மீன்களை பிடித்து சென்றனர். 


    • பெங்களூரு நகரில் உள்ள பல்வேறு சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
    • நடந்த விபத்துக்கு நகர நிர்வாகம், பெங்களூரு மின் விநியோக நிறுவனம் மீது குற்றச்சாட்டு

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பல்வேறு சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் உள்ள பள்ளங்களில் இரு சக்கர வாகனங்கள் சிக்கி விபத்துக்குள்ளாகின்றன.

    இந்நிலையில், நேற்று இரவு பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் தண்ணீர் தேங்கிய சாலையில் ஒரு பெண் ஸ்கூட்டியில் வந்துகொண்டிருந்தார். சாலையை கடக்க முயன்றபோது திடீரென ஸ்கூட்டி நிலைதடுமாறியது. அப்போது அந்தப் பெண், கீழே விழாமல் இருப்பதற்காக சாலையோரம் உள்ள மின்கம்பத்தை பிடித்துள்ளார். அந்த மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டிருந்ததால், அந்தப் பெண் மீது மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    நடந்த விபத்துக்கு நகர நிர்வாகம், பெங்களூரு மின் விநியோக நிறுவனத்தின் பொறுப்பற்ற செயல்பாடுகளே காரணம் என அந்த பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

    ×