search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhopal Gas Tragedy"

    போபால் விஷவாயு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலாக ரூ.7,800 கோடி இழப்பீடு கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. #BhopalGas #Victims #Compensating #SupremeCourt
    புதுடெல்லி:

    மத்திய பிரதேசத்தின் போபாலில் செயல்பட்டு வந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தில் இருந்து கடந்த 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி நள்ளிரவில் மெத்தில் ஐசோசயனேட் என்ற விஷவாயு கசிந்தது. இதை சுவாசித்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் செத்து மடிந்தனர். 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    மிகப்பயங்கர பேரழிவாக கருதப்படும் இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடிய சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு யூனியன் கார்பைடு நிறுவனம் ரூ.715 கோடியை இழப்பீடாக வழங்கியது. அமெரிக்காவை சேர்ந்த இந்த நிறுவனத்தை தற்போது டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

    இந்த நிலையில் விஷவாயு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க யூனியன் கார்பைடு மற்றும் பிற நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கேட்டு மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே வழங்கிய ரூ.715 கோடிக்கு மேல் கூடுதலாக ரூ.7,844 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி சஞ்சிவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்தனர். இந்த மனு மீது ஏப்ரல் மாதம் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர். #BhopalGas #Victims #Compensating #SupremeCourt 
    ×