search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "biblab kumar dep"

    திரிபுரா முதல் மந்திரி பிப்லப் குமார் தேப், பிரசார கூட்டங்களில் தேர்தல் விதிகளை மீறி காங்கிரஸ் கட்சியினரை தகாத வார்த்தைகளால் பேசுவதாக அவர் மீது புகார் கொடுத்துள்ளனர். #TripuraCM #Biblapkumardep #Congresscomplaints
    அகர்தலா:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. ஏற்கனவே சில அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை முழுவதுமாக அறிவித்த நிலையில், சில கட்சிகள் ஒவ்வொரு கட்டமாக வெளியிட்டு வருகின்றன. மேலும் சில கட்சியினர் பிரச்சார பொதுக் கூட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திரிபுரா முதல் மந்திரி பிப்லப் குமார் தேப், காங்கிரஸ் கட்சியினரை ‘கொள்ளையர்கள்’, ‘சாத்தான் கூட்டத்தினர்’, ‘தரகர்கள்’, ‘தந்திர நரிகள்’ என தகாத வார்த்தைகளினால் கடுமையாக தாக்கி பேசினார்.

    இந்த செயலுக்கு திரிபுரா முதல் மந்திரி பிப்லப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினர். இதுவரை மன்னிப்பு கேட்காத நிலையில், திரிபுரா காங்கிரஸ் கட்சியினர் இன்று  பிப்லப்  மீது புகார் கொடுத்துள்ளனர்.

    இது குறித்து திரிபுரா காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் தப்பாஸ் டே கூறியதாவது:-

    மார்ச் 20 அன்று நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டங்களில் பிப்லப், வாக்காளர்களை மிரட்டும் வகையில், மோடி மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால், திரிபுரா மற்றும் அகர்தலா என்றுமே நவீன நகரங்களாக மாற சாத்தியமே இல்லை என கூறியுள்ளார்.



    இலவச கேஸ் சிலிண்டர் சேவை நிறுத்தப்பட்டு, பணம் வசூலிக்கப்படும். மேலும் மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலைக்கு அரிசி வாங்குவதை இந்திய உணவு கழகம் நிறுத்தி விடும் எனவும் பிப்லப் பேசினார். மக்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதுடன், காங்கிரஸ் கட்சியினரையும் மிகவும் அவதூறாக பேசியுள்ளார்.

    இவ்வாறு தப்பாஸ் டே கூறினார்.#TripuraCM #Biblapkumardep #Congresscomplaints
    ×