search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boko Haram Militants"

    நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு குழுவினர் உள்ளிட்ட 16 பேர் கொல்லப்பட்டனர்.
    அபுஜா:

    நைஜீரியாவில் தடை செய்யப்பட்ட போகோ ஹராம் பயங்கரவாதிகள், அரசுப் படைகள் மீதும், பொதுமக்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவ்வகையில் பதற்றம் நிறைந்த வடகிழக்கு மாநிலமான போர்னோவில் நேற்று போகோ ஹராம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 

    மைதுகுரியின் புறநகர்ப்பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களில் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில், உள்ளூர் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த 5 பேர், பொதுமக்களில் 11 பேர் என 16 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

    பயங்கரவாதிகள் கருப்பு அங்கி அணிந்து மோட்டார் சைக்கிள்களில் வந்து தாக்குதல் நடத்தியதாகவும், பெரும்பாலான பொதுமக்கள் வீடுகளில் இருந்து தப்பி ஓடி புதர்களில் மறைந்துகொண்டதாகவும் பொதுஜன கூட்டு அதிரடிப்படையின் செய்தித் தொடர்பாளர் கூறினார். 
    நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 25 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
    லாகோஸ்:

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சில ஆண்டுகளாக நைஜீரிய அரசினை எதிர்த்து போகோ ஹராம் பயங்கரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பின் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதல்களில் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர். 2 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். 
     
    இந்நிலையில் நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ராணுவ தளம் அருகில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். 4 துப்பாக்கி டிரக்குகள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் வந்து தாக்கினர்.

    இந்த தாக்குதலில் 25 ராணுவ வீரர்கள் உள்பட பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    போகோ ஹராம் அமைப்பு ஆப்பரிக்காவின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த அமைப்பு 2009ம் ஆண்டு நைஜீரியாவின் அரசினை எதிர்த்து உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
    நைஜீரியா நாட்டில் போகோ ஹாரம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் படைவீரர்கள் உள்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
    அபுஜா:

    நைஜீரியா நாட்டில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தொடர்ச்சியாக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமானோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். 

    இந்நிலையில், நைஜீரியா நாட்டின் மாய்துகுரி நகரில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் சிலர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர்.

    இந்த கொடூர தாக்குதலில் படைவீரர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை ஊழியர்கள் உள்பட 15 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வடக்கு நைஜீரியாவின் மாய்துகுரி நகரில் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
    ×