search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Borussia Monchengladbach"

    ரஷியாவில் நடைபெறும் பண்டேஸ்லிகா கால்பந்து லீக்கில் இருந்து ஹம்பர்க் அணி வெளியேறியதால் ரசிகர்கள் கோபத்தில் மைதானத்தின் கேலரியை தீ வைத்து கொளுத்தினார்கள்.
    லா லிகா, லீக்-1, இங்கிலீஷ் பிரீமியர் போன்று ஜெர்மனியில் பண்டேஸ்லிகா கால்பந்து லீக் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 1963-ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் 18 அணிகள் கலந்து கொண்டு விளையாடும். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் யார் முன்னணி பெறுகிறார்களோ, அவர்களுக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்படும்.



    பண்டேஸ்லிகா லீக் தொடங்கிய காலத்தில் இருந்தே இடம்பிடித்து வந்த அணி ஹம்பர்க். இந்த அணி 2017-18 சீசனான தற்போதைய சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 33 ஆட்டங்கள் முடிவில் ஹம்பர்க் 28 புள்ளிகளும், வோல்ஃப்ஸ்பர்க் 30 புள்ளிகளும் பெற்றிருந்தது.

    கடைசி லீக்கில் ஹம்பர்க் வெற்றி பெற்று, வோல்ஃப்ஸ்பர்க் தோல்வியடைந்தால் மட்டுமே 16-வது இடத்தை பிடித்து அடுத்த சீசனுக்கான பண்டேஸ்லிகாவில் கலந்து கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது.



    நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹம்பர்க் 2-1 என புருஸியா மோன்செங்லாட்பச் அணியை வீழ்த்தியது. அதேசமயத்தில் வோல்ஃப்ஸ்பர்க் 4-1 என கோல்ன் அணியை வீழ்த்தியது. இதனால் ஹம்பர்க் அணி 17-வது இடம்பிடித்து பண்டேஸ்லிகாவில் இருந்து முதன்முறையாக வெளியேறியது.



    இதனால் ஹம்பர்க் அணி ரசிகர்கள் கடும் கோபம் அடைந்தனர். அவர்கள் கேலரியை தீ வைத்து கொளுத்தியதுடன், தீப்பிடிக்கும் பொருட்களை எரித்து மைதானத்திற்குள் வீசினார்கள். இதனால் புகை மண்டலமாக காட்சியளித்தது. பின்னர் சிறிதி நேரம் கழித்து பாதுகாப்பு அதிகாரிகள் தீயை அணைத்தனர். ஹம்பர்க் அணி விளையாடிக் கொண்டிருக்கும்போதே ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
    ×