search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Break The Beard"

    தனது அடையாளங்களில் ஒன்றாக மாறிப்போன தாடியை எடுக்க மறுத்துள்ள விராட் கோலி, தனது தாடியை பற்றி பேச்சு நடந்து கொண்டிருப்பது பொழுது போக்காக உள்ளது என அவர் ட்வீட்டியுள்ளார். #ViratKohli #BreakTheBeard

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி என்றதும், அவரது அதிரடி ஆட்டத்துடன் தாடியும் நம் கண் முன்னே வந்து போகும். இந்நிலையில், தற்போது கிரிக்கெட் வீரர்களிடம் பிரேக் தி பியர்ட் (தாடியை அகற்றுதல்) என்ற சேலஞ்ச் பிரபலமாக உள்ளது. இந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்ட பல கிரிக்கெட் வீரர்கள் தங்களது தாடியை ஷேவ் செய்து மற்ற வீரர்களுக்கு சேலஞ்ச் விடுகின்றனர்.

    இந்நிலையில், இந்த சேலஞ்சை ஏற்க விராட் கோலி மறுத்து விட்டதாக தெரிகிறது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள கே.எல் ராகுல், ‘விராட் கோலி தனது தாடியை இன்ஸ்சுரன்ஸ் செய்ய போவதாக தனக்கு தெரிகிறது’ என பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் சிலர் விராட் கோலியின் தாடியை புகைப்படம் எடுப்பது போலவும், சில பேப்பர்களில் கையெழுத்து பெறுவது போல காட்சிகள் இருந்தன.



    ஆனால், நிஜத்தில் டெல்லியில் உள்ள மியூசியம் ஒன்றில் விராட் கோலியின் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்காக அவரது உருவங்கள் அளவிடப்பட்டது. அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை ராகுல் கிண்டலுக்காக வெளியிட்டுள்ளார். ராகுலின் வீடியோவுக்கு பதில் கொடுத்துள்ள கோலி, ‘தனது தாடியை பற்றி பேசிக்கொண்டிருப்பது பொழுது போக்காக உள்ளது’ என ட்வீட்டியுள்ளார்.
    ×