என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » bring back antiquities
நீங்கள் தேடியது "bring back antiquities"
கோகினூர் வைரம், திப்பு சுல்தான் போர்வாள் உள்ளிட்ட இந்தியாவின் வரலாற்று பொக்கிஷங்களை கொண்டுவர அரசு செய்தது என்ன? என பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் ஆணையர் கேள்வி எழுப்பியுள்ளார். #CIC #PMO #MEA
புதுடெல்லி:
கோகினூர் வைரம், மகாராஜா ரஞ்சித் சிங்கின் தங்க சிம்மாசனம், ஷாஜகானின் மதுக்கோப்பை, திப்பு சுல்தானின் போர்வாள், புத்தர் பாதம், சரஸ்வதி மார்பிள் சிலை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பொக்கிஷங்கள் முந்தைய காலங்களில் பல்வேறு படையெடுப்பின் கீழ் கொள்ளையடிக்கப்பட்டு வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, இந்தியாவின் இந்த பொக்கிஷங்கள் எப்போது இங்கு கொண்டுவரப்படும் என தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் வெளியுறவு அமைச்சகத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை பரிசீலித்த அதிகாரிகள் தொல்லியல் துறையை நாடுமாறு பதிலளித்துள்ளனர்.
இதையடுத்து, தொல்லியல் துறையிடம் கேட்டதற்கு, வெளிநாடுகளில் இருந்து பொருள்களை கொண்டு வருவது நாங்கள் அல்ல. இருக்கும் பொருள்களை அப்படியே பார்த்துக் கொள்வதுதான் எங்கள் வேலை என தெரிவித்தனர். இதனை அடுத்து மனுதாரர் தலைமை தகவல் ஆணையரிடம் மேல்முறையீடு செய்துள்ளார்.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்துள்ள தலைமை தகவல் ஆணையர் ஆசார்யுலு இதுதொடர்பாக, வரலாற்று பொக்கிஷங்களை கொண்டுவர மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது தொடர்பாக பிரதமர் அலுவலகம், கலாச்சார துறை அமைச்சகம் பதிலளிக்க அவர் அறிவுறுத்தியுள்ளார். #CIC #PMO #MEA
×

X