search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Captain Vijayakant"

    • விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் காலமானார்.
    • நாளை மாலை 4.45 மணிக்கு விஜயகாந்தில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    தே.மு.தி.க. நிறுவனரும், நடிகருமாக விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் காலமானார்.

    தொடர்ந்து, தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த்தின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    நாளை மாலை 4.45 மணிக்கு விஜயகாந்தில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    இதற்கிடையே, விஜயகாந்தின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்க அரசு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    விஜயகாந்தின் உடலை பொது மக்களின் அஞ்சலிக்காக தீவுத் திடலில் வைக்க திட்டமிடப்பட்டது. இதுதொடர்பாக, பிரேமலாத, சுதீஷ் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில், நாளை அதிகாலை 4 மணியளவில் விஜயகாந்தின் உடல் தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    அங்கு, விஜயகாந்தின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

    பிறகு, அங்கிருந்து மதியம் 1 மணிக்கு விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு, நாளை மாலை விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    ராஜாஜி அரங்கில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், பொது மக்களின் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

    • கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • விஜயகாந்த்-க்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

    தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவரும், பொதுச் செயலாளருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். மருத்துவமனையில், விஜயகாந்த்-க்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.

    இந்த நிலையில், விஜயகாந்த் உடல்நிலை குறித்து தே.மு.தி.க. சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில், கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இது குறித்து வெளியாகி இருக்கும் அறிக்கையில், "தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர்கள் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்."

    "செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்த்து யாரும் நம்பவேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும்வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம்," என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ×